கனடாவில் தொழில் பெற விரும்புவோருக்கான மகிழ்ச்சியான தகவல்

#Canada #Lanka4 #information #தகவல் #தொழில் #work #லங்கா4 #Happy #Canada Tamil News
கனடாவில் தொழில் பெற விரும்புவோருக்கான மகிழ்ச்சியான தகவல்

கனடாவின் ஒன்றாறியோ மாகாணத்தில் வேலை வாய்ப்பு பெற்றுக் கொள்வதற்காக காத்திருப்பவருக்கு மாகாண அரசாங்கம் மகிழ்ச்சி செய்தி ஒன்றை வெளியேற்றுள்ளது.

 தொழிலுக்காக விண்ணப்பம் செய்பவர்கள் கனடிய தொழில் அனுபவம் தொடர்பில் கவலை கொள்ள தேவையில்லை என அறிவித்துள்ளது. தொழில் தகைமைகளில் கனடிய பணி முன் அனுபவம் தேவையில்லை என ஒன்றாரியோ அரசாங்கம் அறிவித்துள்ளது.

 தொழில் வாய்ப்புக்கான விண்ணப்பங்கள் மற்றும் தொழில் வாய்ப்பு குறித்த விளம்பரங்களில் தொழில் முன் அனுபவம் பற்றிய விடயங்களை குறிப்பிடக் கூடாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.

images/content-image/1699689678.jpg

 கனடாவிற்குள் பிரவேசிக்கும் குடியேறிகள் நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்யக் கூடிய வகையில் நடைமுறைகளில் மாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டும் என மாகாண அரசாங்கம் சுட்டிக்காட்டி உள்ளது.

 மாகாணத்தில் நிவவி வரும் தொழிலாளர் பற்றாக்குறைக்கு இவ்வாறு தொழில் முன் அனுபவ தேவைப்பாடு தடையாக அமையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் விளம்பரங்கள் மற்றும் விண்ணப்பங்களில் எதிர்வரும் காலங்களில் கனடிய தொழில் முன் அனுபவம் பற்றி குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!