வெள்ள அனர்த்த பிரதேசத்திற்கு விரைந்தார் ஜனாதிபதி மக்ரோன்

#France #Lanka4 #President #Flood #வெள்ளம் #லங்கா4 #ஜனாதிபதி #பிரான்ஸ் #France Tamil News #Tamil News
வெள்ள அனர்த்த பிரதேசத்திற்கு விரைந்தார் ஜனாதிபதி மக்ரோன்

கடந்த ஒருவாரத்துக்கும் மேலாக பா-து-கலே மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பை அடுத்து, நிலமைகளை நேரில் கண்டறிய ஜனாதிபதி மக்ரோன் இன்று செவ்வாய்க்கிழமை அங்கு செல்கிறார்.

 நண்பகலுக்கு சற்று முன்னதாக ஜனாதிபதி அங்கு சென்றடைவார் எனவும், அவருடன் முதல் பெண்மணி பிரிஜித் மக்ரோனும் உடன் பயணிக்க உள்ளதாகவும் எலிசே மாளிகை தெரிவித்துள்ளது.

images/content-image/1699948651.jpg

 வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடுவதோடு, அவசியமான நடவடிக்கைகளை வழங்குவதற்கு ஆணையிடுவார் எனவும் அறிய முடிகிறது. பா-து-கலே மாவட்டம் கடந்த ஒருவாரமாக வெள்ள பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. 

இன்று செவ்வாய்க்கிழமையும் அங்கு அடைமழை காரணமாக செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல பாடசாலைகள் இயக்க முடியாமல் உள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!