பாபிலோமாவைரஸ் தடுப்பு மருந்து ஏற்றப்பட்ட பிரான்ஸ் மாணவன் மரணம்

#France #Lanka4 #மருந்து #Vaccine #லங்கா4 #Virus #பிரான்ஸ் #France Tamil News #Tamil News
பாபிலோமாவைரஸ் தடுப்பு மருந்து ஏற்றப்பட்ட பிரான்ஸ் மாணவன் மரணம்

எதிர்காலத்தில் ஏற்படும் மார்பகப் புற்றுநோய், பிறப்புறுப்புகளில் ஏற்படும் புற்றுநோய் போன்றவற்றுக்கு காரணமான 'papillomavirus' எனப்படும் வைரசுக்கு எதிரான தடுப்புசி கடந்த ஒக்டோபர் மாதத்தின் முதல் பகுதியில் இருந்து இடைநிலை கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரிகளில் செலுத்தப்பட்டு வருகிறது.

 இந்த நிலையில் கடந்த ஒக்டோபர் மாதத்தின் கடைசியில் Loire-Atlantique பகுதியில் 'papillomavirus' எதிரான தடுப்புசியை செலுத்திய பின்னர் அங்கேயே காத்திருக்கும் குறித்த 15 நிமிட காத்திருப்பின் போது, ஒரு மாணவன் சுகயீனமுற்று மயக்கமடைந்த நிலையில் இருக்கையோடு தரையில் வீழ்ந்துள்ளான், தலையில் அடிபட்ட குறித்த மாணவன் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். 

சில நாட்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தடுப்பூசியே மாணவனின் மரணத்துக்கும் காரணம் என செய்திகள் பரவியது. 

images/content-image/1700046762.jpg

இந்த நிலையில் (Agence de sécurité du médicament) மருந்துகள் பாதுகாப்பு நிறுவனம் (ASM) உடனடியாகவே விசாரணைகளை மேற்கொண்டு இன்று முடிவினை அறிவித்துள்ளது. "மாணவனின் மரணத்திற்கு தடுப்பூச நேரடிக் காரணம் இல்லை, தலையில் அடிபட்டதாலேயே மரணம் சம்பவித்துள்ளது" என தெரிவித்துள்ளது.

 மேலும் குறித்த தடுப்பூசி புதியது அல்ல கடந்த 15 ஆண்களாக பாவனையில் உள்ளது, ஏற்கனவே உலகம் முழுவதும் 300 மில்லியன் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது, பிரான்சில் மட்டும் 12 மில்லியன் தடுப்பூசிகள் மாணவர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மருந்துகள் பாதுகாப்பு நிறுவனம் (ASM) இனிவரும் காலங்களில் தடுப்பூசி செலுத்திய பின்னரான சுமார் 15 நிமிட காத்திருப்பு நேரத்தில் இருக்கைகளில் அமராமல் தரையில் விரிப்புகள் மீது அமரவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!