பிரான்ஸில் வேலையற்றோர் வீதம் காலாண்டில் அதிகரித்த வண்ணம் உள்ளது
#France
#Lanka4
#தொழில்
#லங்கா4
#பிரான்ஸ்
#France Tamil News
#Tamil News
Mugunthan Mugunthan
1 year ago
பிரான்சில் வேலை தேடுவோரின் எண்ணிக்கை இவ்வருடத்தின் மூன்றாவது காலாண்டில் அதிகரித்துள்ளது. இரண்டாவது காலாண்டில் 7.2% சதவீதமாக இருந்த வேலையில்லாதோர் எண்ணிக்கை 0.2% சதவீதத்தால் அதிகரித்து தற்போது 7.4% சதவீதமாக உள்ளது.
இத்தகவலை INSEE நிறுவனம் வெளியிட்டுள்ளது. "இந்த அதிகரிப்பு நாம் எதிர்பார்த்தது தான். உலக பொருளாதார சரிவின் ஒரு பகுதியாக இது உள்ளது!" என பிரெஞ்சு தொழிலாளர் அமைச்சர் Olivier Dussopt தெரிவித்தார்.
அதேவேளை, பணவீக்கம் மெல்ல மெல்ல சீரடைந்து வருகிறது. கடந்த செப்டம்பரில் 4.9% சதவீதமாக இருந்த பணவீக்கம் (GDP) ஒக்டோபரில் 4% சவீதமாக குறைவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.