பிரான்ஸில் வெடிகுண்டு அச்சுறுத்தலை மேற்கொண்ட 5 பேர் கைது

#Arrest #France #Lanka4 #கைது #லங்கா4 #Bomb #பிரான்ஸ் #France Tamil News #Tamil News #Threat
பிரான்ஸில் வெடிகுண்டு அச்சுறுத்தலை மேற்கொண்ட 5 பேர் கைது

பாடசாலைகளுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுத்த ஐவர் Val-de-Marne மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 Villeneuve-Saint-Georges (Val-de-Marne) நகரில் உள்ள பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை காலை வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. இந்த அச்சுறுத்தல் விடுத்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 14 தொடக்கம் 17 வயதுடையவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். 

images/content-image/1700208488.jpg

அவர்கள் Villeneuve-Saint-George மற்றும் Sucy-en-Brie நகரங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 30,000 யூரோக்கள் குற்றப்பணமும் அறவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து இதுவரை பிரான்சில் 996 வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!