பிரெஞ் விவசாயியொருவர் விளைவித்த மிகப் பெரிய பூசணிக்காய்!
#France
#Lanka4
#லங்கா4
#பிரான்ஸ்
#France Tamil News
#Tamil News
#Farmer
Mugunthan Mugunthan
1 year ago

குக்குர்பிட்டா என அழைக்கப்படும் courge பூசணிக்காய் ஒன்றை ’இராட்சத அளவில்’ விளைவித்து பிரெஞ்சு விவசாயி ஒருவர் ஆச்சரியப்படுத்தியுள்ளார். Aulnay-sur-Mauldre (Yvelines) நகரில் உள்ள பண்ணை ஒன்றிலேயே இந்த மிகப்பெரிய பூசணி விளைவிக்கப்பட்டுள்ளது.
1.2 மீற்றர் நீளமுடைய இந்த பூசணி, 44 கிலோ எடையுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மகிழுந்தில் வைத்து எடுத்துச் செல்லப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
இது குறித்து அதன் உரிமையாளர் தெரிவிக்கையில், இந்த பூணிக்காய் Neapolitan butternut இனத்தைச் சேர்ந்தது எனவும், அதன் விதை இத்தாலியில் இருந்து தருவிக்கப்பட்டது எனவும் குறிப்பிட்டார்.



