மேஷ ராசியினருக்கு நட்பு வட்டாரத்தால் நன்மைகள் உண்டாகும் - இன்றைய ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #Lanka4
Prasu
1 year ago
மேஷ ராசியினருக்கு நட்பு வட்டாரத்தால் நன்மைகள் உண்டாகும் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி: நீண்டநாள் எதிர்பார்ப்பு இன்று எளிதாக நிறைவேறும். உடல்நிலை சீராகும். பரணி: வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை அதிகரிக்க புதிய அணுகுமுறையைக் கையாளுவீர்கள். கார்த்திகை 1: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். நட்பின் வழியே நன்மை உண்டாகும். எதிர்ப்பு விலகும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: பெரியவர்களை சந்தித்து ஆசி பெறுவீர்கள். நண்பர்கள் ஒத்துழைப்பால் ஒரு செயல் நிறைவேறும். ரோகிணி: கடவுள் வழிபாடு மனதில் அமைதியை உண்டாக்கும். தடைபட்டிருந்த செயல்களை மீண்டும் தொடர்வீர்கள். மிருகசீரிடம் 1,2: குடும்பத்தினர் தேவைகளைத் தெரிந்து பூர்த்தி செய்வீர்கள். தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: இரண்டு நாட்களாக இருந்த நெருக்கடிகள் விலகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி லாபமாகும். திருவாதிரை: செயல்களில் விழிப்புணர்வு தேவை. வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். புனர்பூசம் 1,2,3: குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு விலகும். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.

கடகம்: 

புனர்பூசம் 4: வாழ்க்கைத் துணையின் வழிகாட்டுதலுடன் ஒரு செயலில் லாபம் காண்பீர்கள். வருவாய் அதிகரிக்கும். பூசம்: நண்பர்களால் ஆதாயம் காண்பீர்கள். வெளியூர் பயணம் லாபமாகும். பொருளாதார நிலை உயரும். ஆயில்யம்: எதிர்பார்த்த நன்மைகளை இன்று அடைவீர்கள். புதிய முயற்சியில் ஈடுபட்டு லாபம் காண்பீர்கள்.

சிம்மம்

மகம்: திட்டமிட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். உங்களை எதிர்த்து செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். பூரம்: உடலில் இருந்த சங்கடம் தீரும். வருமானத்திற்காக புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். உத்திரம் 1: வெளி வட்டாரத்தில் உங்கள் ஆலோசனைகளுக்கு வரவேற்பு இருக்கும். எதிரிகள் விலகிச் செல்வார்கள்.

கன்னி

உத்திரம் 2,3,4: உயர்ந்த இடத்தில் இருப்பவர்களை சந்திப்பீர்கள். சொத்து விவகாரம் உங்களுக்கு சாதகமாகும். அஸ்தம்: புதிய தொழில் தொடங்க பணம் திரட்டும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். செயலில் இருந்த தடைகள் விலகும். சித்திரை 1,2: புதிய பொறுப்பு உங்களைத் தேடி வரும். அரசியலில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.

துலாம்

சித்திரை 3,4: நீங்கள் எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். சுவாதி: தாய்வழி உறவினர்களால் நன்மை உண்டாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். விசாகம் 1,2,3: புதிய சொத்து வாங்கும் எண்ணம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.

விருச்சிகம்

விசாகம் 4: கவனத்துடன் செயல்பட்டு லாபம் அடைவீர்கள். குடும்பத்தில் உண்டான சலசலப்பு மறையும். அனுஷம்: உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள். நண்பர்களால் அனுகூலம் காண்பீர்கள். கேட்டை: வியாபாரத்தில் ஆதாயம் ஏற்படும். சகோதரர்கள் உதவியுடன் ஒரு வேலையை முடிப்பீர்கள்.

தனுசு

மூலம்: எண்ணிய செயலை துணிச்சலுடன் செய்து முடிப்பீர்கள். சிலர் கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர்கள். பூராடம்: பண வரவில் இருந்த தடைகள் விலகும். குடும்பத்தில் நிம்மதியான நிலை ஏற்படும். உத்திராடம் 1: உங்கள் அணுகுமுறையால் தொழில் போட்டியாளர்கள் விலகிச் செல்வார்கள். லாபம் அதிகரிக்கும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: உறவினர் ஆதரவுடன் நீண்டநாள் பிரச்னை ஒன்றுக்கு முடிவு காண்பீர்கள். மனக்குழப்பம் நீங்கும். திருவோணம்: கேட்ட இடத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். அவிட்டம் 1,2: புதிய வாய்ப்பு ஒன்று உங்களைத் தேடிவரும். கவனமுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.

கும்பம்

அவிட்டம் 3,4: தொலைந்து போன பொருள் கிடைக்கும். வேலை பளுவின் காரணமாக சலிப்பு உண்டாகும். சதயம்: மற்றவர்கள் உங்களை அலட்சியம் செய்வதாக நினைத்து வருந்துவீர்கள். அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். பூரட்டாதி 1,2,3: வருவாய் இழுபறியாகும். உங்கள் செயலில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதாக இருக்கும்.

மீனம்

பூரட்டாதி 4: முயற்சியில் வெற்றி காண்பீர்கள். பெரியோர் ஆதரவால் முன்னேற்றம் காண்பீர்கள். உத்திரட்டாதி: வியாபாரத்தில் உண்டான பிரச்னைகள் விலகும். மனதில் இருந்த சங்கடம் நீங்கும். ரேவதி: எதிர்பார்ப்பு இன்று பூர்த்தியாகும். வர வேண்டிய பணம் வந்து சேரும். நெருக்கடியில் இருந்து மீளுவீர்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!