உணவகங்களுக்கான பற்றுச்சீட்டுக் கால அவகாசம் பிரான்ஸில் நீடிக்கப்பட்டுள்ளது

#France #Hotel #Lanka4 #உணவு #லங்கா4 #பிரான்ஸ் #France Tamil News #Tamil News
உணவகங்களுக்கான பற்றுச்சீட்டுக் கால அவகாசம் பிரான்ஸில் நீடிக்கப்பட்டுள்ளது

உணவகங்களுக்கான பற்றுச்சீட்டுக்களுக்கான (Tickets-restaurant ) கால அவகாசம் வரும் 2024 ஆம் வருடத்தின் இறுதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை இதற்கான ஆதரவு வாக்குகள் பதிவாகின. ஊழியர்களுக்கு அவர்களது நிறுவனத்தினரால் வழங்கப்படும் குறித்த பற்றுச்சீட்டுக்களுக்கான கால அவகாசம் இவ்வருடம் டிசம்பர் 31, 2023 வரை வழங்கப்பட்டுள்ளது.

 ஆனால் பிரான்சில் நிலவும் பணவீக்கம் காரணமாக இந்த பற்றுச்சீட்டுக்களை முழுமையாக பயன்படுத்துவதில் சிக்கல்கள் எழுந்துள்ளன. குறிப்பாக கோதுமை, பாஸ்தா, அரிசி, இறைச்சி போன்ற பொருட்களுக்கான தட்டுப்பாடு தொடர்ந்தும் நிலவுகிறது.

images/content-image/1700812106.jpg

 இந்நிலையில், இதன் கால அவகாசத்தை நீடிப்பது தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று வியாழக்கிழமை காலை பாராளுமன்றத்தில் இது தொடர்பாக வாக்கெடுப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

 அதில் 117 ஆதரவு வாக்குகளும், 1 எதிர்ப்பு வாக்குகளும் பதிவாகின. அதையடுத்து, இந்த கால அவகாசம் 2024 ஆம் ஆண்டு இறுதி வரை நீடிக்கப்படும் என அறிய முடிகிறது. அதேவேளை, செனட் மேற்சபையிலும் இது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!