லியோன் நகரின் முன்னாள் நகரபிதாவின் இறுதிச்சடங்கில் ஜனாதிபதி மக்ரோன் பங்கேற்பு
#France
#President
#லங்கா4
#ஜனாதிபதி
#பிரான்ஸ்
#France Tamil News
#Tamil News
Mugunthan Mugunthan
1 year ago

மறைய லியோன் நகரின் முன்னாள் நகரபிதா Gérard Collomb இன் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் லியோனுக்கு பயணமாக உள்ளார்.
நவம்பர் 29, புதன்கிழமை அவரது இறுதிச் சடங்கு லியோனில் உள்ள Saint-Jean தேவாலயத்தில் காலை 11 மணிக்கு இடம்பெற உள்ளது. அதுவரை அவரது பூதவுடல் லியோன் நகரசபைக் கட்டிடத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும்.
இந்த இறுதிச் சடங்கு நிகழ்வில் கலந்துகொள்ள ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் புதன்கிழமை லியோனுக்கு பயணிக்க உள்ளார்.
லியோன் மாவட்டத்தின் முன்னாள் நகரபிதா Gérard Collomb, நேற்று சனிக்கிழமை தனது 76 ஆவது வயதில் வயிற்றுப்புற்றுநோய் காரணமாக மரணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



