கனடாவில் வாழும் இந்தப்பகுதி மக்கள் அதிக கோபப்படுபவர்களாக காணப்படுகின்றனர்
#Canada
#people
#Lanka4
#லங்கா4
#Canada Tamil News
#Tamil News
Mugunthan Mugunthan
1 year ago

கனடாவில் கோபமான மக்கள் வாழும் பகுதியாக அல்பர்ட்டா மாகாணம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. கனடியன் ரிசர்ச் இன்சையிட் கவுன்ஸில் என்ற அமைப்பினால் நடத்தப்பட்ட ஆய்வு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
வீடமைப்பு, பணவீக்கம் மற்றும் அரசியல் போன்ற விடயங்களில் மக்கள் அதிருப்தி கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் அதிக கோபமான மக்கள் வாழும் பகுதியாக அல்பர்ட்டா மாகாணம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
இரண்டாவது அதிக கோபமான மக்கள் வாழும் பகுதியாக ஒன்றாரியோ மாகாணம் கருதப்படுகின்றது.
அட்லாண்ட்டிக் கனடா அடுத்த நிலையை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.



