பிரித்தானியாவில் மிக உணர்வுபூர்வமாக அனுஷ்ட்டிக்கப்பட்ட மாவீரர் நாள் நினைவேந்தல்!
#SriLanka
#Britain
#London
Mayoorikka
1 year ago
பிரித்தானியாவில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்ட்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
தமிழர் வரலாற்று மையத்தில் மாவீரர் நாள் சிறப்பு நிகழ்ச்சிகள் பல்லாயிரக்கணக்கான மக்களுடன் உணர்வுபூராவாக அனுஷ்ட்டிக்கப்படுகின்றது.
தமிழ் இளையோர் அமைப்பு செயற்பாட்டாளர்களினால் கொடிவணக்கம் நிகழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து ஈகைச்சுடருக்கான ஆயத்த மணி ஒலி எழுப்பப்பட்டு தாயக மண்ணுக்காக தம் உயிரை ஈந்த மாவீரர்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது.
கல்லறைகளுக்கு முன்பாக மாவீரர் குடும்பத்தை சேர்ந்த உறவுகளால் தமிழர் வரலாற்று மைய கண்ணீரில் மூழ்கியது.
தொடர்ந்து தமிழீழ எழுச்சிப் பாடல்களும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.