பிரான்ஸில் நவிகோ கட்டணம் ஜனவரி தொடக்கம் அதிகரிப்பு
2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நவிகோ போக்குவரத்து அட்டையின் விலை அதிகரிக்கப்பட உள்ளது.
நவிகோ கட்டணம் 2.6% சதவீதத்தால் விலை அதிகரிக்கப்பட உள்ளது. அதன் புதிய விலை ₤86.30 யூரோக்களாகும். ₤75.20 யூரோக்களாக இருந்த நவிகோ கட்டணம் இவ்வருடத்தின் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ₤84.10 யூரோக்களாக அதிகரிக்கப்பட்டிருந்தது.
அதையடுத்து மீண்டும் 2024 ஆம் ஆண்டு ஜனாவரி மாதம் விலை அதிகரிப்புக்கு உள்ளாகிறது என Île-de-France Mobilités (இல் து பிரான்சுக்கான பொது போக்குவரத்து சபை) அறிவித்துள்ளது.
வருடாந்த நவிகோ கட்டணம் 24 யூரோக்களால் அதிகரிக்கப்படுகிறது. அதன்படி தற்போது ₤925.10 யூரோக்களாக உள்ள கட்டணம் ₤950.40 யூரோக்களாக அதிகரிக்கப்பட உள்ளது.
அதேவேளை, ஒரு பயணத்துக்கான மெற்றோ பயணச்சிட்டை ஒன்றின் விலை ₤2.10 யூரோக்களில் இருந்து ₤2.15 யூரோக்களாக அதிகரிக்கப்படுகிறது.
இந்த விலை அதிகரிப்பினால் Île-de-France Mobilités சபைக்கு ₤88 மில்லியன் யூரோக்கள் வருவாய் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.