கனடாவில் பணவீக்க அதிகரிப்பால் பலர் உளநலக் குறைவிற்காளாகியுள்ளனர்

#Canada #Lanka4 #அதிகம் #மன_அழுத்தம் #inflation #பணவீக்கம் #லங்கா4 #Canada Tamil News #Tamil News
கனடாவில் பணவீக்க அதிகரிப்பால் பலர் உளநலக் குறைவிற்காளாகியுள்ளனர்

கனடியர்கள் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக கடும் பாதிப்புகளை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது வாழ்க்கைச் செலவு அதிகரிப்பானது கனடிய மக்களின் உளச் சுகாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 பண வீக்கமானது பொருளாதார ரீதியில் மட்டுமின்றி மக்களின் உளவியல் ரீதியாகவும் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

images/content-image/1701159260.jpg

 எம்என்பி என்ற நிறுவனத்தினால் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் இந்த விடயங்கள் தெரியவந்துள்ளன. பண வீக்கம் காரணமாக அதிக எண்ணிக்கையிலானவர்கள் வீட்டுக்குள்ளேயே அடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

 வெளியே செல்வதனால் ஏற்படக்கூடிய செலவுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இவ்வாறு மக்கள் வீட்டுக்குள்ளேயே இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மக்கள் நண்பர்களுடன் வெளியே செல்வது, சமூக செயற்பாடுகளில் ஈடுபடுவது போன்றவற்றை குறைத்துக் கொண்டுள்ளதாக சிலர் தெரிவித்துள்ளனர்.

 பணவீக்க அதிகரிப்பு மற்றும் வட்டி வீத அதிகரிப்பு ஆகிய ஏதுக்களினால் மக்கள் பெரும் பாதிப்புகளை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!