ஹமாஸ் அமைப்பினரால் பணையக் கைதிகளாகவிருந்த 3 பிரெஞ் சிறுவர்கள் விடுவிப்பு

#France #Lanka4 #கைது #லங்கா4 #Freed #பிரான்ஸ் #France Tamil News #Tamil News #Hamas #Hostages
ஹமாஸ் அமைப்பினரால் பணையக் கைதிகளாகவிருந்த 3 பிரெஞ் சிறுவர்கள்  விடுவிப்பு

பணயக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்ட மூன்று பிரெஞ்சுச் சிறுவர்கள் நேற்று திங்கட்கிழமை மாலை விடுவிக்கப்பட்டனர். Eitan Yahalomi (வயது 12), Sahar Kalderon (வயது 16) மற்றும் Erez Kalderon (வயது 12) ஆகிய மூன்று சிறுவர்களை விடுவித்துள்ளனர்.

 அவர்கள் கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினரால் பிடித்துச் செல்லப்பட்டு பணயக்கைதிகளாக சிறைவைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் விடுவிக்கப்பட்டதை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் வரவேற்றுள்ளார்.

images/content-image/1701168581.jpg

 அவர்களது பெயர்களை பகிர்ந்து, “நாம் அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்க தேவையான அனைத்து வழிகளையும் கண்டடைவோம்!” எனவும் தெரிவித்தார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினருக்கிடையே தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. 

நான்காம் கட்டமாக நேற்று 11 பணயக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்தனர். அவர்களிலேயே மேற்குறித்த மூன்று பிரெஞ்சு சிறுவர்களும் விடுவிக்கப்பட்டிருந்தனர். அனைத்து பணயக்கைதிகளும் இஸ்ரேல் தலைநகர் Tel Aviv இல் உள்ள மருத்துவமனை ஒன்றில் மருத்துவ மதீப்பிடுகளுக்காக அழைத்து செல்லப்பட்டிருந்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!