பிரான்ஸ் கடலோர காற்றாலை மின்சார திட்டத்தினை விரிவுபடுத்தவுள்ளது - ஜனாதிபதி மக்ரோன்
மின்சாரத்தேவைக்காக பிரான்சில் இன்று ஒரே ஒரு கடலோர காற்றாலை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. Saint-Nazaire கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலையே அதுவாகும்.
இந்நிலையில் பதினைந்து புதிய காற்றாலை தொகுதிகளை உருவாக்கும் பணி தீவிரமாக இடம்பெற்று வருவதாக ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டில் நாம் பத்து ஜிகாவாட்ஸ் ( gigawatts) மின்சாரத்தினை இந்த காற்றாலை வழியாக உற்பத்தி செய்யும் நிலையை அடைவோம் எனவும், 2030 - 2035 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதிக்குள் பத்துக்கும் மேற்பட்ட புதிய காற்றாலைகளை நாம் உருவாக்குவோம் எனவும் ஜனாதிபதி மக்ரோன் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இன்று பிரான்சில் 480 மெகாவாட்ஸ் மின்சாரம் காற்றாலை மூலமாக (Saint-Nazaire, Loire-Atlantique காற்றாலை மூலமாக) உற்பத்தி செய்யப்படுகிறது. 2025 ஆம் ஆண்டில் அதனை எட்டு தொடக்கம் 10 வரையான ஜிகாவாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நிலையை உருவாக்குவோம் எனவும், ஏலக்காரர்களுக்கான அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்தார்.