பிரான்ஸ் பல்பொருள் அங்காடியில் கத்திக்குத்திற்கு ஊழியர் ஒருவர் இலக்காகியுள்ளார்
#Police
#France
#Attack
#Lanka4
#கத்தி
#தாக்குதல்
#பொலிஸ்
#லங்கா4
#Knife
#பிரான்ஸ்
#France Tamil News
#Tamil News
Mugunthan Mugunthan
1 year ago

Sannois ( Val-d'Oise ) நகரில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றின் ஊழியர் ஒருவர் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
சனிக்கிழமை இரவு 8 மணி அளவில், அங்குள்ள பல்பொருள் அங்காடி ஒன்றினை மூடிவிட்டு, வீடு திருபிக்கொண்டிருந்த ஊழியர் ஒருவரை பின்னால் வந்த இருவர் கத்தியால் தாக்கியுள்ளனர். முதுகு மற்றும் மார்பு பகுதியில் கத்தியால் குத்தப்பட்டதில் அவர் படுகாயமடைந்தார்.
பின்னர் பாதசாரிகள் சிலர் SAMU மருத்துவக்குழுவினரை அழைத்து காயமடைந்தவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
மேற்படி தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர், தாக்குதலாளிகள் இருவரையும் கைது செய்தனர். என்ன நோக்கத்துக்காக தாக்குதல் இடம்பெற்றது என்பது தெரியவரவில்லை.



