கனடா ஜனாதிபதி இந்தியாவிற்கான குற்றச்சாட்டை தீவிரமாக எடுத்துக் கூறியுள்ளார்
#India
#Canada
#Lanka4
#President
#லங்கா4
#ஜனாதிபதி
#Canada Tamil News
#Tamil News
Mugunthan Mugunthan
1 year ago

பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம் தொடர்பாக கனடாவின் குற்றச்சாட்டை, இந்தியா தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.
கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம் தொடர்பாக கனடா பிரதமர் இந்தியா மீது குற்றம்சாட்டினார். இதனையடுத்து இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.
இச்சூழ்நிலையில், அமெரிக்காவில் வாழும் காலிஸ்தான் ஆதரவாளர் ஒருவரை கொலை செய்ய நடந்த சதித்திட்டம் முறியடிக்கப்பட்டு உள்ளதாகவும், இந்த சதியில் இந்திய அரசின் அதிகாரி ஒருவருக்கு தொடர்பு உள்ளதாக அமெரிக்காவின் நீதித்துறை அமைச்சகம் கூறியிருந்தது.
ஜஸ்டின் ட்ரூடோ எங்களின் குற்றச்சாட்டை இந்தியா தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என ஆரம்பம் முதலே கூறி வருகிறோம். இதனை அமெரிக்க அறிக்கை வலியுறுத்துகிறது.



