இங்கிலாந்தில் கடுமையான பனிப்பொழிவு : அம்பர் எச்சரிக்கை விடுப்பு!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
#England
Dhushanthini K
1 year ago

இங்கிலாந்தின் வடமேற்கு பகுதியில் வெப்பநிலை உறைபனிக்குக் கீழ் சரிந்துள்ளது. இதனையடுத்து பனிப்பொழிவுக்கான புதிய அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பயண தாமதங்கள், மற்றும் மின்வெட்டுகளின் சாத்தியம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்காட்லாந்தின் வடக்கு கடற்கரை மற்றும் தென்மேற்கு பகுதிகளிலும், இங்கிலாந்தின் தென்மேற்கு மற்றும் கிழக்கு கடற்கரை பகுதிகளிலும், கடுமையான பனிபொழிவு பதிவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இங்கிலாந்தில் உள்ள சுற்றுச்சூழல் நிறுவனம் ஆறுகள், கால்வாய்கள், ஏரிகள் மற்றும் குளங்களுக்கு அருகில் கவனமாக இருக்குமாறு மக்களை வலியுறுத்தியுள்ளது.



