மறைமுக எதிரிகளை கண்டறியும் கன்னி ராசியினர் - இன்றைய ராசிபலன்

மேஷம்:
அசுவினி : குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். உங்கள் எண்ணம் நிறைவேறும். சுறு சுறுப்புடன் செயல்பட்டுவீர்கள். பரணி: எதிர்பார்த்த தகவல் வரும். உறவினர் ஆதரவுடன் ஒரு செயலில் வெற்றி காண்பீர். முக்கிய முடிவு எடுப்பீர். கார்த்திகை 1: இழுபறியாக இருந்த விவகாரம் உங்களுக்கு சாதகமாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும்.
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: அறிவாற்றல் வெளிப்படும். குடும்ப நலனில் அக்கறை ஏற்படும். பிள்ளைகளால் நன்மை உண்டாகும். ரோகிணி: பெரியோர் வழியே நல்ல செய்தி வரும். உறவினர்கள் உங்கள் முயற்சிக்கு உதவியாக இருப்பார்கள். மிருகசீரிடம் 1,2: கடனாக கேட்ட தொகை வரும். புதிய இடம் வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் தரும்.
மிதுனம்:
மிருகசீரிடம் 3,4: எதிர்பார்ப்பு நிறைவேறி உற்சாகமுடன் செயல்படுவீர். உங்கள் செயல் லாபமாகும். வரவு அதிகரிக்கும். திருவாதிரை: பிரபலத்தின் ஆதரவுடன் செயல்பட்டு உங்கள் முயற்சியில் லாபம் காண்பீர். பயணம் ஆதாயம் தரும். புனர்பூசம் 1,2,3: பழைய பிரச்னை ஒன்றுக்கு முடிவு கட்டுவீர். வரவு அதிகரிக்கும். உங்கள் எண்ணம் பூர்த்தியாகும்.
கடகம்:
புனர்பூசம் 4: விழிப்புடன் செயல்பட்டு விரும்பியதை அடைவீர். சகோதர வகையில் ஆதரவு அதிகரிக்கும். பூசம்: வியாபாரம் செய்யும் இடத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். பழைய முயற்சியில் ஆதாயம் அதிகரிக்கும். ஆயில்யம்: லாப சிந்தனை மேலோங்கும். அதற்குரிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். நண்பரால் உதவி உண்டு.
சிம்மம்:
மகம்: மனதில் தெளிவு பிறக்கும். தடைபட்ட செயல் நிறைவேறும். திட்டமிட்டு செயல்பட்டு லாபம் அடைவீர். பூரம்: உங்கள் முயற்சி நிறைவேறும். எதிர்பாராத வருமானம் ஏற்படும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். உத்திரம் 1: வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறை லாபத்தை ஏற்படுத்தும். தடைபட்டிருந்த வருவாய் வரும்.
கன்னி:
உத்திரம் 2,3,4: தேவையற்ற குழப்பம் உண்டாகும். டென்ஷன் அதிகரிக்கும். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். அஸ்தம்: உங்கள் மனம் மகிழும்படியான சம்பவம் ஒன்று நடைபெறும். சிறப்பான முயற்சியை மேற்கொள்வீர். சித்திரை 1,2: பணிபுரியும் இடத்தில் திறமையை வெளிப்படுத்துவீர். மறைமுக எதிரிகளைக் கண்டறிவீர்.
துலாம்:
சித்திரை 3,4: அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பாராத செலவு தோன்றும். குடும்பத்தில் ஒருவர் தேவை நிறைவேறும். சுவாதி: நீண்ட நாள் பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும். வெளியூர் பயணத்தில் எதிர்பார்த்த நன்மை ஏற்படாமல் போகும். விசாகம் 1,2,3: கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதற்காக செலவு செய்வீர்கள். கையிருப்பு கரையும்.
விருச்சிகம்:
விசாகம் 4: வியாபாரத்தில் இருந்த தடை விலகும். எதிர்பாராத லாபம் உண்டாகும். எதிர்பார்த்த தகவல் வரும். அனுஷம்: குடும்ப நலனுக்காக சில முயற்சிகளை மேற்கொள்வீர். வரவேண்டிய பணம் வரும். கேட்டை: பகைவரால் ஏற்பட்ட சங்கடம் விலகும். நண்பரால் உங்கள் எண்ணம் நிறைவேறும்.
தனுசு:
மூலம்: தொழிலில் ஏற்பட்ட தடைக்கு மாற்று கண்டுபிடிப்பீர்கள். பெரியோர் ஆலோசனை நன்மை தரும். பூராடம்: வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறை ஆதாயமாகும். நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். உத்திராடம் 1: பெரியோர் ஆசியுடன் ஒரு செயலில் ஈடுபட்டு ஆதாயம் காண்பீர். நிதி நிலை உயரும்.
மகரம்:
உத்திராடம் 2,3,4: நேற்று இருந்த சங்கடம் விலகும். பணவரவு மகிழ்ச்சி தரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். திருவோணம்: இழுபறியாக இருந்த ஒரு முயற்சி இன்று முடிவிற்கு வரும். உங்கள் செயல் ஆதாயத்தை ஏற்படுத்தும். அவிட்டம் 1,2: நீங்கள் எதிர்பார்த்த வரவு இன்று உண்டாகும். போட்டியாளர்கள் விலகிச் செல்வார்கள்.
கும்பம்:
அவிட்டம் 3,4: சிந்தித்து செயல்படுவதால் எதிர்பார்ப்பு நிறைவேறும். எதிரிகளால் சில சங்கடம் தோன்றும். சதயம்: சந்திராஷ்டமம் என்பதால் அமைதி காப்பது நல்லது. அடுத்தவர் பிரச்னைகளில் தலையிட வேண்டாம். பூரட்டாதி 1,2,3: முயற்சி இழுபறியானாலும் கடைசி நேரத்தில் உங்கள் எண்ணம் நிறைவேறும். எதிர்பார்த்த பணம் வரும்.
மீனம்:
பூரட்டாதி 4: வாழ்க்கைத் துணையின் ஆதரவுடன் ஒரு செயலை செய்து முடிப்பீர். பொருளாதார நிலை உயரும்.
உத்திரட்டாதி: நண்பர்களுடன் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தகவல் வரும்.
ரேவதி: செயல்களில் ஏற்பட்ட தடை விலகும். நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர். முயற்சி பலித்தமாகும்.



