அமைச்சர் திரன் அலஸ் மீது அதிருப்தியில் சட்டத்தரணிகள்! விடுத்துள்ள கோரிக்கை!
சட்டத்தரணிகள் தொடர்பில் அமைச்சர் திரன் அலஸ் அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் அதிருப்தி அடைவதாக கொழும்பு மேல் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நபர் ஒருவர் சட்டத்தின் முன் குற்றவாளி என்று நிரூபிக்கப்படும் வரை குற்றம் சாட்டப்பட்டவராகக் கருதப்படுவார் என்று சங்கம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இவ்வாறான குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக வாதிடுவதற்கு உரிமையுள்ளதுடன், குற்றம் சாட்டப்பட்டவருக்கு தனது உண்மைகளை நீதிமன்றில் முன்வைப்பதற்கு சட்டத்தரணி ஒருவரின் உதவியைப் பெறுவதற்கு உரிமையுண்டு எனவும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கம் தனது அறிவிப்பில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளதாவது: சட்டத் தொழில் என்பது நாட்டின் நீதி மற்றும் நியாயம் மற்றும் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதற்காக செயற்படும் ஒரு தொழில்சார் துறையாகும்.
அமைச்சர் திரன் அலஸ் சட்டத்தரணியின் கௌரவத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பிரதிப் பொலிஸ் மா அதிபராக தேஷ்பந்து தென்னகோன் நியமிக்கப்படுவதற்கு சில சட்டத்தரணிகளே எதிர்ப்புத் தெரிவித்ததாக அமைச்சர் திரன் அலஸ் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.