இந்திய-இலங்கை வைத்திய நிபுணர்களால் ஆயிரக்கணக்கானோருக்கு இலவச கண் சத்திர சிகிச்சை!

#SriLanka #Vavuniya
PriyaRam
2 years ago
இந்திய-இலங்கை வைத்திய நிபுணர்களால் ஆயிரக்கணக்கானோருக்கு இலவச கண் சத்திர சிகிச்சை!

இந்திய மற்றும் இலங்கை வைத்திய நிபுணர்களால் வவுனியாவில் 1253 பேருக்கு இலவச கண் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர் ஜே.எம்.நிலக்சன் கருத்துத் தெரிவிக்கையில், 

“வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸின் நெறிப்படுத்தலில் வைத்திய நிபுணர் சர்வேஸ்வரனின் முயற்சியினால் இந்திய துணைத்தூதரகத்துடன் இணைந்து இலவச கண் சத்திர சிகிச்சை முகாமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

images/content-image/2023/12/1703236093.jpg

இம்மாதம் 11 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட குறித்த சத்திர சிகிச்சை முகாமானது இம்மாதம் 21 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

இதில் 1253 பேர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றிருந்தனர்” எனத் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!