போதைவஸ்தால் கொடூரமான முறையில் கையாளப்பட்ட இளைஞன் பொலிஸாரால் மீட்பு
#SriLanka
#Police
#drugs
#Lanka4
#இலங்கை
#பொலிஸ்
#லங்கா4
#Youngster
#Safe
Mugunthan Mugunthan
2 years ago
இலங்கையை ஆட்டிப்படைக்கும் இவ்வேளையில் வறுமை, வேலை இல்லா பிரச்சனையால் வாடுவதாலும் பலர் இலகுவாக பணம் சம்பாதிக்க வித விதமான போதைப் பொருளைக்கடத்த முயல்கின்றனர்.
இன்றும் களுத்துறை, கலமுல்ல, லாகோஸ்வத்த பிரதேசத்தில் வைத்து 18, 20, 25, 27 மற்றும் 28 வயதுடைய இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது வீட்டில் கை கால்கள் கட்டப்பட்டு, கொடூரமாக தாக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருந்த இளைஞனை பொலிஸார் காப்பாற்றியுள்ளனர். அந்த வீடு சித்திரதைக்கூடம் போன்று செயற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சோதனையின் போது இளைஞனை தாக்கிய 3 கூரிய வாள்கள், போதைப் பொருட்கள் அடங்கிய சிறிய பொதிகள், ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் மற்றும் பொதியிடும் பொருட்கள் என்பன காணப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.