பாடசாலை மாணவிகள் ஹிஜாப் அணிவது தொடர்பிலான அறிவிப்பு!
#India
#School
#Student
PriyaRam
2 years ago
கர்நாடகாவில் பாடசாலை மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் சித்தராமைய்யா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எந்த உடை அணிவது, என்ன உணவு சாப்பிடுவது என்பது அவரவர்களுடைய தனிப்பட்ட விருப்பம்.
அதை நாம் ஏன் தடுக்க வேண்டும்? உங்கள் விருப்பத்துக்கு ஏற்ற எந்த உடை வேண்டுமானாலும் அணிந்து கொள்ளுங்கள்” என முதலமைச்சர் சித்தராமைய்யா தெரிவித்துள்ளார்.