இது வடமராச்சியில், நெல்லியடி கரவெட்டியில் இருக்கும் உங்கள் கிராமம்(இராச கிராமம்). உதவ வாருங்கள்.- கேசவன்
இலங்கையின் வட மாகாணத்தின் யாழ் மாவட்டத்திலுள்ள நெல்லியடி கரவெட்டி மேற்கிலுள்ள ஒரு கிராமம்(இராச கிராமம்) ஆகும் இங்கே தற்போது சுமார் 80 வரையான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.
1980 ம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி ஆகிய மேன்மை தங்கிய இரணசிங்க பிரேமதாச அவர்களினால் பத்து இலட்சம் வீட்டுத் திட்டத்தில் நெல்லியடி கரவெட்டி மேற்கிலுள்ள கரம் பொன் அல்லது கன்பொல்லை என்ற இடத்தில் 80 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு அப்போதைய உடுப்பிட்டித் தெகுதிப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த திரு இராசலிங்கம் அவர்களினது பெயரின் முற்பகுதியை எடுத்து இராச கிராமம் எனப் பெயர் சூட்டி பிரேமதாச அவர்களினால் திறந்து வைக்கப்பட்டு பயனாளிகளிற்கு கையளிக்கப்பட்டது.

இங்கு வாழும் மக்களில் பெருமளவானவர்கள் கூலித் தொழில்கள் செய்தே தங்களின் வாழ்வாதாரத்தை கொண்டு செல்கின்றார்கள் பெரிதாக எவரும் செல்வந்த நாடுகளிற்கு புலம்பெயர்ந்ததாகத் தெரியவில்லை படித்து அரச உத்தியோக சேவைகளில் இருப்போரும் மிக மிக அரிதே.
சுமார் 43 வருடங்களிற்கு முன்னதாக இந்த மாதிரிக் கிராமம் அமைந்ததினால் சமீப காலங்களில் இவர்களிற்கு சுனாமித் திட்டத்திலோ அல்லது போர் அழிவின் மீளக் குடியமர்வு வீட்டுத்திட்டத்திலோ இவர்களிற்கு எதுவும் கிடைக்கவில்லை.
பல நூறு youtube பக்கங்கள் இருந்தும் ஒரு நிறுவனமானது இவர்களிடம் சென்று கானொளி பதிவிட்டு புலம்பெயர் தேசங்களில் இருந்து உதவிகளைப் பெற்று இவர்களிற்கு வழங்கியதாக அறிய முடியவில்லை.

இப்போது மழை காலம் ஆகையினால் இக் கிராமத்தின் வீதிகள் வளவுகள் எங்கும் வெள்ளம் தேங்கி நின்று இயல்பு வாழ்க்கையை மிகவும் பாதித்து வருகின்றது. ஆகவே எமது பகுதியில் இப்படியொரு பகுதி மிகவும் கீழ்மட்ட வறுமைக் கோட்டிற்குள் இருப்பதை நினைக்க மிகவும் மனவருத்தமாய் இருக்கின்றது.
இவர்களினது வாழ்வின் வசந்தத்திற்கு அரச அதிகாரிகள் செல்வந்தர்கள் மற்றும் சமூக முற்போக்கு வாதிகள் முன்வர வேண்டும். விரைந்து செயற்படுவோற்கு எனது ஆதரவு நிச்சயம் உண்டு.
தகவல் -கேசவன்-