1004 கைதிகள் விடுதலைக்குள் தமிழ் அரசியல் கைதிகள் அடங்குவார்களா?

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
1004 கைதிகள் விடுதலைக்குள்   தமிழ்  அரசியல் கைதிகள் அடங்குவார்களா?

இவ்வருடம் நத்தார் பண்டிகையை முன்னிட்டு தெரிவு செய்யப்பட்ட கைதிகளுக்கு விசேட அரச மன்னிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இதில் 989  ஆண்களும் 15 பெண்களும் அடங்குவதாகசிறைச்சாலை ஆணையாளர், ஊடகப் பேச்சாளர் காமினி பி. திஸாநாயக்க அறிவித்துள்ளார். 

இதேவேளை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு  நீண்டகாலமாக தமிழ் சிறைக் கைதிகள் பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். நீண்ட போராட்டங்களின் பின்னர் சிலர் மாத்திரம் கடந்த காலப்பகுதியில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். 

இருப்பினும் இன்னும் ஏராளமான கைதிகள் தொடர்ச்சியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுதலை செய்ய  கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது. 

இவ்வாறான ஒரு சூழ்நிலையில்,தற்போது ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுகின்ற 1004பேரில் தமிழ் அரசியல் கைதிகளும் உள்ளடங்குகிறார்களா என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!