கைவிடப்பட்ட நிலையில் இருந்த ஒருதொகை பீடி இலைகள் கண்டுப்பிடிப்பு!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சுமார் 2000 கிலோ பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
நுரைச்சோலை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான வகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றை சோதனையிட்டபோது, 1,955 கிலோ பீடி இலைகள் கையிருப்பு காணப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
சந்தேகநபர்கள் அடையாளம் காணப்படாத நிலையில், குறித்த இலைகளையும், லொறியையும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.