ரீயூனியன் தீவிலிருந்து நாடுகடத்தப்பட்ட 14 இலங்கையர்கள்!

#SriLanka #Airport #Visa #deports
Mayoorikka
2 years ago
ரீயூனியன் தீவிலிருந்து நாடுகடத்தப்பட்ட 14 இலங்கையர்கள்!

கடல் மார்க்கமாக ரீயூனியன் தீவுக்கு சட்ட விரோதமாக குடியேற முயற்சித்தபோது கைது செய்யப்பட்ட 14 இலங்கை பிரஜைகளை பிரான்ஸின் ரீயூனியன் தீவின் அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர். 

 இவர்கள் அனைவரும் சட்டவிரோதமாக படகுகளில் பயணித்தபோதே தடுத்து நிறுத்தப்பட்டு கரைக்கு கொண்டு செல்லப்பட்டு விமானம் மூலம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

 இவர்கள் பேருவளை, சிலாபம் மற்றும் களுவாஞ்சிக்குடி பிரதேசங்களில் வசிப்பவர்கள் எனவும் 21 முதல் 60 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!