கர்ப்பிணிப்பெண்களின் ஆரோக்கியத்திற்கு மீன் வகை உணவு சாலச்சிறந்தது
கர்ப்பிணிப்பெண்களின் போசணையானது நம்நாட்டில் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி மூலம் நமக்கு அறியக்கிடைக்கிறது.
இத்தகைய காலக்கட்டத்தில் அவர்கள் இதனை கருத்திற் கொள்ளாவிடின் பிறக்கும் குழந்தைக்கும் தாய்க்கும் ஆபத்தான நிலைமைகளை உருவாக்க கூடும். இவர்களிற்கு விலைமதிப்பு மிக்க உணவு வகைகளை வாங்கி உட்கொள்ள போதுமான வசதியில்லாமல் இருக்கலாம்.
அதற்கு கர்ப்பிணிப்பெண்கள் மீன் வகை உணவுகளைச் சாப்பிட்டு வந்தால் பிறக்கும் குழந்தைகளின் மூளை வளர்ச்சி நன்றாக இருக்குமென ஆய்வில் தெரியவந்துள்ளது. நமது ஊரில் இந்த மீன் வகை தாராளமாக கிடைக்கும்.
இங்கிலாந்து பல்கலைக்கழகமொன்றில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் கர்ப்பிணிப்பெண்கள் மீன் வகை உணவை அதிகம் உட்கொண்டால் பிறக்கும் குழந்தைகள் மூளை வளர்ச்சியுடனும், மூளை சம்பந்தமான நோய்கள் தாக்காமலும் இருக்குமென கண்டறியப்பட்டுள்ளது.
கர்ப்ப காலத்தில் முதலில் சிசுவிற்கு முண்ணான் விருத்தியாவதாலும், கண் மற்றும் கை தொடர்பு மிகச் சிறப்பாக செயல் படவும் இந்த மீன் உணவு காரணமாக அமைகிறது.
இங்கு மீன் உணவு எனும் போது மீனில் காணப்படும் கொழுப்பமிலமான போலிக்கமிலம் முண்ணான் விருத்திக்கும், மூளை வளர்ச்சிக்கேதுவான ஒமேகா - 3 கொழுப்பமிலம் அங்கு உள்ளதாலாகும். தாயின் இதய ஆரோக்கியத்திற்கும் இந்த ஒமேகா - 3 கொழுப்பமிலம் இதமானது.
எனவே மீன் உணவை அளவுக்கதிகமாக எடுக்காமல் அளவாக உட்கொண்டு நல்ல புத்திகூர்மையான குழந்தைகளை ஆரோக்கிமாக பெறவும் மீன் உணவு ஏதுவாக அமையும்.
குறிப்பு - அளவுக்கதிகமான மீன் உணவு குழந்தைகளின் புத்திகூர்மையை மழுங்கவும் செய்யும் என்பது அவதானத்திற்குரியது.