மின் கட்டண அதிகரிப்பைத் தொடர்ந்து பிரான்ஸில் பாவனை குறைந்துள்ளது

#France #Electricity Bill #லங்கா4 #பிரான்ஸ் #consumer #lanka4Media #lanka4_news #லங்கா4 ஊடகம் #lanka4.com #Lanka4 france tamil news
Mugunthan Mugunthan
10 months ago
மின் கட்டண அதிகரிப்பைத் தொடர்ந்து பிரான்ஸில் பாவனை குறைந்துள்ளது

மின்கட்டண உயர்வினால் பிரெஞ்சு மக்கள் மின்சார பாவனையை குறைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் நவம்பர் முதல் டிசம்பர் வரைக்குட்பட்ட நாட்களில் 7 தொடக்கம் 8 சதவீதம் வரை மின்பாவனையை குறைத்துள்ளனர். 

பணவீக்கம் காரணமாக மக்களிடையே ’வாங்கும் திறன்’ வீழ்ச்சியடைந்துள்ளதுடன், மின்கட்டணம் தொடர்ச்சியாக அதிகரித்துள்ளதால் இந்த மின் பாவனை வீழ்ச்சியடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, ஜனவரி இரண்டாம் வாரம், கடும் குளிர் நிலவியிருந்த போது, பிரான்சின் மின்சார பாவனை 84 ஜிகாவட்ஸ் (GW) அளவை எட்டியிருந்தது.

images/content-image/1706018053.jpg

 ஜனவரி ஆரம்பத்தில் மின் தேவை அதிகமாக இருந்ததால் மூடப்பட்டிருந்த பல அணுமின் நிலையங்கள் திறக்கப்பட்டிருந்தன. ஜனவரி 9 ஆம் திகதி பிரான்சில் உள்ள 56 அணுமின் நிலையங்களில் 47 நிலையங்கள் இயக்கப்பட்டிருந்தன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!