யார் இந்த இராவணன்? தமிழ் உலகம் தந்த மாபெரும் வீரன்! முழுமையான வரலாறு (வீடியோ இணைப்பு)
இராவண மன்னன் பத்துத் தலைகளும் இருப்பது கைகளும் கொண்ட ஒரு அரசன்.
இராவணன் போல் ஒரு தமிழ் வீரன் இல்லை என இராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது.
இராவணன் தமிழர் பரம்பரையில் வந்த வரலாறுகள் ஒருபுறமிருக்க இராவண மன்னனுடைய வராலாற்றினை நாங்கள் ஒருதரம் திரும்பிப் பார்க்க விரும்புகின்றோம்.
லங்கா4 ஊடகம் ஊடாக இராவணனின் வரலாற்றினை பதிவு செய்கின்றோம். இராவணனுக்கு உண்மையில் பத்துத் தலைகளா இருப்பது கைகளா என ஆராய்ந்து பார்க்கையில் அறிஞர்கள் கூறியுள்ள விடையம் எனவென்றால் இராவணனுக்கு பத்து மனித மூளையின் பலம் மற்றும் இருப்பது கைகள் கொண்டவர்களுடைய பலம் இருப்பதால் உதாரணத்திற்கு பத்துத் தலைகள் இருபது கைகள் கொண்ட இராவணன் என ஆய்வாளர்கள் கூறியுள்ளார்கள்.
இந்தநிலையில் இராவணன் தமிழன் என்ற நம்பிக்கையோடு எங்கள் ஈழத்தமிழர்களின் வரலாற்றில் ஒருசில பாகங்களோடு பங்கு வகிக்கின்ற காரணத்தினால் இந்த ஆய்வுகளூடாக அவருடைய வரலாற்றின் சில தொகுப்பாக இங்கேகொண்டு வருகின்றோம்.
இங்கே சில தவறுகள் சரிகள் இருந்தாலும் உங்களுடைய அறிவிற்கு எட்டியவாறு இதனை புரிந்து கொள்ளுமாறு அறிந்து கொள்ளுமாறும், அல்லது தவறுகளை சுட்டிக் காட்டுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
ஆம் நாங்கள் இராவணனுடைய வரலாற்றுக்குள் புகுந்து இராவணனுடைய வரலாற்றினை பார்ப்போம்
அந்த வகையில் முதன்மையான ஒரு அரசன் என்றால் அது பத்து தலைகள், இருபது கைகள் கொண்ட இராவணன் எத்தனையோ போர் வீரர்களை தன்னகத்தில் கொண்ட ஒரு தமிழ் மகா வீரன் இராவணன் ஒரு முக்கியமானவராவார்.
இராவணனுக்கு தசக்கிரீவன், இலங்கேஸ்வரன், இராவணேஸ்வரன், திரிலோக அதிபதி என்று பல பெயர்கள் உண்டு. பத்து முகங்களை உடையமையினால் தசமுகன் என்றும் அறியப்படுகிறார்.
இராவணனது தந்தை வைச்ரவ மகரிஷி ஆவார். வீடணன், கும்பகர்ணன், சூர்ப்பனகை ஆகியோர் உடன் பிறப்புகளாவர்.
அவ்வகையிலும் காலத்தின் தேவை அறிந்தும் அவர் பற்றி அவர் ஒழுக்கம், வீரம், தொடர்பாக அறிவோமா? ஆம்… ஆம்…யார் இந்த இராவணன். இராவணன் போல் ஒரு தமிழ் வீரன் இராமாயணத்தில் இல்லை.. கதைக்காக தமிழனை அப்படி காட்டியிருந்தாலும்.. அவனின் வீரம் போற்றுதலுக்குறியது..
மற்றும் மாற்றான் தோட்டத்து மல்லிகையை அவனின் கை படாது வைத்திருந்த கண்ணியவான்.. உண்மையில் தமிழ் உலகம் தந்த மாபெரும் வீரன் அவன். வரலாற்றின் திரிபுகளால் கொடுங்கோலன் ஆக்கப்பட்டான். இராமனை விட மேலானவன்.
பெரும்பாலானோருக்கு இராமயணம் பற்றிய கதைகளை கேட்டிருப்போம் படித்திருப்போம் இராமயணம் கதையை படிக்கும்போது நம்மில் பெரும்பாலானோர் இராவணன் ஒரு கொடிய அரக்கன் என்றும் பெண்கள் மீது மோகம் கொண்டவர் என்றுதான் நினைக்க தோன்றும் ஆனால் உண்மையில் அவரை ஒரு கொடிய அரக்கன் போல சித்தரித்துள்ளனர்.
உண்மையில் இராவணன் யார் அவர் மக்களுக்காக செய்த நன்மை மற்றும் அவருடைய வரலாறு பற்றி காண்போம்.
பண்டைய காலத்தில் இலங்கையை ஆண்ட நாகர் இனத்தை சேர்ந்த கைகைசிக்கும் ஏகர் இனத்தை சேர்ந்த வஜ்ரவாக்கும் பிறந்தவர்தான் இந்த இராவணன்.இவருடன் உடன்பிறந்தவர்கள்தான் கும்பகர்ணன்,சூர்பனகை மற்றும் விபீஷனன் ஆவர்.
உண்மையில் இராவணன் என்பது அவருடைய இயற்பெயரா என்றால் அது உண்மையில்லை இராவணனின் இயற்பெயர் சிவதாசன் மற்றும் நிலவழகி பாண்டியன் என்பதுதான் இயற்பெயர்.
அவருடைய எதிரிகள்தான் இவருக்கு இராவணன் என்ற பெயரை சூட்டியுள்ளனர் ஆனால் இதிகாசங்களில் இவருடைய பெயரையே மாற்றி ஒரு அரக்கன் போல சித்தரித்துள்ளனர். இதுவரை இலங்கையில் யாரும் காணாத அளவுக்கு இலங்கையை உச்சத்திற்கு கொண்டுசெல்கிறார் இராவணன், படைபலத்திலும் சரி செல்வத்திலும் சரி இலங்கையானது இராவணன் ஆட்சியில் செல்வ செழிப்பாக இருந்தது என வராலறுகள் குறிப்பிடுகின்றன.
அன்றைய காலத்தில் வாழ்ந்த மக்கள் இராவணனை கடவுளாக பார்த்தனர் என்று கூறப்படுகிறது சிவ பக்தியில் இராவணனை மிஞ்ச எவருமில்லை என்றே சொல்லலாம் இராவணன் இலங்கையை ஆட்சி செய்த காலத்தில் சிவனுக்காக 6 கோவில்கள் கட்டபட்டாதாக வராலாறுகள் கூறுகிறது.
இராவணன் பல்வேறுகலைகளில் சிறந்தவர். அதில் குறிப்பாக மருத்துவத்திலும் அதிக திறன்பெற்றவராக இராவணன் இருந்துள்ளார் . இராவணனின் மனைவி மண்டோதரி எனப்படும் வண்டார்குழலியும் தீவிர சிவ பக்தை ஆவார் இவர்கள் இருவருக்கும் பிறந்தவர்கள்தான் மேகநாதன் எனப்படும் இந்திரஜித் மற்றும் அக்ஷய குமாரன் ஆவர்.
ஈழத்தை பலமாக வைத்திருந்ததோடு நல்லாட்சியும் புரிந்துவந்தவன்தான் ராவணன். இராவணன் பற்றிய ஆய்வுக் குறிப்புகள் தமிழில் இருப்பதைவிட சிங்களத்தில்தான் அதிகம் காணப்படுகின்றன.
இராவணன் ஒரு மிகச்சிறந்த சிவபக்தன் என்பதோடு அவனது காலத்தில் “ஈழம்” மிகச்சிறந்த தொழினுட்ப வசதிகளுடன் இருந்திருக்கிறது. இன்று இருக்கும் “சிகிரியா” இராவணனின் காலத்தில் ராவணனின் “புட்பக விமானம்” இறங்கும் தளமாக பாவிக்கப்ட்ட இடமாக இருக்கலாம் என்று சில சிங்கள ஆய்வாளர்கள் எழுதியிருக்கிறார்கள்.
இராவணன் பாவித்த புட்பக விமானத்தின் சில எச்சங்களும் இராவணன் காலத்து சில எச்சங்களும் சிகிரியா குன்றின் நடுவில் இருக்கிறது என்று நம்பப்படும் சுரங்கத்திற்குள் இருந்ததாகவும் மேற்கத்தேய ஆட்சியாளர்களின் காலத்தில்தான் அவை திருடப்பட்டிருக்கலாம் எனவும் அந்த சிங்கள ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
இராவணன் ஆட்சி எப்படி நடந்தது?
அவன் ஆண்ட இலங்கையின் அழகையும், அங்கிருந்த மக்களின் செழிப்பான நிலையையும், கலைகள் ஒங்கியிருந்த சூழலையும் கம்பன் வர்ணித்திருக்கும் விதத்திலிருந்தே தெரிந்து கொள்ள முடியும். நல்லது நடப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாத வயிற்றெரிச்சல்காரர்கள் அதைக் கெடுக்க நினைப்பது போல, ஓங்கியுயர்ந்த மாளிகைகளைக் கொண்ட இலங்கையை இராம பக்தனான அனுமன் தன் வாலில் பற்றிய தீக் கொண்டு அழித்ததையும் இராமாயணம் வர்ணிக்கிறது.
எப்படிப் பார்த்தாலும் இராமனின் அயோத்தியைவிட ஆயிரம் மடங்கு உயர்வானதாகவே இருந்திருக்கிறது இராவணன் ஆண்ட இலங்கை.
அப்புறம் என்ன, நல்ல ஆட்சியை இராமன் ஆட்சி என்றும் மோசமான ஆட்சியை இராவணன் ஆட்சி என்றும் சொல்கிறோம்?
ஒரு சில வட இந்திய காப்பியங்கள் இராவணனை தவறாக சித்தரித்து அவரை அரக்கன் காண்பிக்கின்றன.
இந்த உலகின் 8-வது அதிசயம் என கூறப்படும் இலங்கையில் சிகிரியா என்னும் இடத்தில் இருக்கும் இராவணின் கோட்டைதான் உலக அதிசயமாக பார்க்கபடுகிறது.
இராவணன் நீர்வீழ்ச்சி
இராவணன் நீர்வீழ்ச்சி இலங்கையின் ஊவா மாகாணத்தில் கிரிந்தி ஆற்றில் அமைந்துள்ள ஒரு நீர்வீழ்ச்சியாகும். இது எல்லை – வெள்ளவாயா பெருந்தெருவிற்கு அருகே அமைந்துள்ளமையும் இங்கு குறிப்பிடவேண்டும்..
முழு ஈழத்தையும் இராவணன் ஆண்டான் என்பதற்கு இன்றைய இலங்கையின் தெற்கில் இருந்து வடக்குவரை பாதிப்புகள் இருக்கின்றன. இராவணனை சார்ந்து நிற்கும் பெயர்கள் முக்கிய சின்னங்கள் என பல விடயங்கள் இன்னமும் கையாளப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இராவணன் காலத்து ஆலயங்கள்,
இராவணனின் வேறு சில வரலாற்று எச்சங்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.
இராவணன் காலத்து ஆலயங்கள் என்று குறிப்பிடுவதனால் அவை இராவணனால் கட்டப்பட்டன என்று பொருள் இல்லை. விஜயன் வருகைக்கு முன்னரே இலங்கையில் இருந்த சைவாலயங்கள் என்று இவற்றைக்கூறலாம். விஜயனின் வருகைக்கு முன்னர் இலங்கையில் வாழ்ந்த இயக்கர் நாகரின் ஆட்சியில் அக்காலத்து மன்னர்களால் இக்கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகின்றது.
இதைவிட இலங்கையில் விஜயமன்னன் குடிகளை வசப்படுத்தும் நோக்குடன் சமய வழிமுறைகளை சரியாக கடைப்பிடித்தான்.
இலங்கையில் ஆட்சியை அமைக்கு முன்னரே நாலு திசைகளிலும் சிவாலயங்களை எழுப்பினான். கீழ்திசையில் கோணெசர் கோவிலையும், மேல்திசையில் கேதீச்சர கோவிலையும் பழுதுபார்த்து, அக்கோவில்களில் பூசை நடாத்தும் பொருட்டு காசிப் பிராமணர்களை அழைத்துவந்தான் என யாழ்ப்பாண வைபமாலையில் கூறப்படுகின்றது.
அதைவிட இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் கதிர்காமத்திலுள்ள கதிரைமலைமீது (ஏழுமலை) நின்று தென் கடலை நோக்கினால் குடா வடிவிலான கற்சிகரமும், கற்கொடியும் ஒன்று கடற்தளத்தின் மீது தெரிவதனை இன்றும் அவதானிக்கலாம். இந்த இரண்டு பாறைகளும் இராவணனின் சிறிய கோட்டை பெரிய கோட்டை என்று அழைக்கப்படுகின்றன.
வீரத்தில் ,பராக்கிரமத்தில், வேதங்களில் பாண்டித்தியம் கடவுள் பக்தி( சிவபக்தி) ஆழ்த இசை ஞாணம் ,அஸ்திரங்களின் நிபணத்துவம் ராஜ நீதி இவையாவும் இவனது குணாதிசியங்கள்.
இவ்வாறு இராவணனின் புகழ் பற்றி பேசிக்கொண்டே போகலாம் அந்த அளவுக்கு அவர் சிறந்தவர்.
ஆனால் ஒரு சில வட இந்திய காப்பியங்கள் இராவணனை தவறாக சித்தரித்து அவரை அரக்கன் காண்பிக்கின்றன.
வெற்றி யாருக்கு கிடைக்கிறதோ அதற்கேற்றவாறு வராலாறுகள் மாற்றி அமைக்கப்படும் அதுபோலதான் இராவணனின் வரலாறும் மாற்றியமைக்கபட்டுள்ளது. இன்றளவும் இராவணனுக்கு வட இந்தியாவிலேயே நிறைய கோவில்கள் உள்ளன அரக்கன் என்ற ஒருவரை யாரும் கடவுளாக வழிபடமாட்டார்கள் எனவே வரலாறுகளின் உண்மைதன்மையை நாம் அறிந்துகொள்வது அவசியம்.
இராவணனின் ஆட்சியில் இலங்கை செல்வச் செழிப்போடும் இருந்தது. அதுமட்டுமல்லாமல் நாடு மக்கள் இராவணனை கடவுளாக பார்த்தனர். மாற்றான் மனைவி என்றாலும் அவள் சம்மதம் இல்லாமல் அவள் மீது தனது நிழல் கூட படக் கூடாது என எண்ணியவன் இராவணன். அவ்வாறு இருக்கையில் அவனது ஒழுக்கம் இங்கே மேலோங்கி உள்ளது. இந்த நிலையில் இராவணனை அரக்கன் கொடியவன் என சித்தரிப்பது என்பது வரலாறு திரிபுகளே என கூறலாம்.