அதிர்ஷ்டம் மற்றும் குடும்ப உறவை மேம்படுத்த இந்த செடியை வீட்டில் வளருங்கள்.

#Lanka4 #ஆன்மீகம் #குடும்பம் #லங்கா4 #Plant #மகிழ்ச்சி #Happy #family #Spirituality #lanka4Media #lanka4_news #லங்கா4 ஊடகம் #lanka4.com
Mugunthan Mugunthan
2 months ago
அதிர்ஷ்டம் மற்றும் குடும்ப உறவை மேம்படுத்த இந்த செடியை வீட்டில் வளருங்கள்.

உங்களுக்கு கையில் பணம், வீட்டில் செல்வம் அனைத்தும் சேர்ந்து இருந்தாலும் குடும்பத்தில் சண்டைகளும், நம்மதியும் இல்லாமல் இருந்தால் நீங்கள் சேர்த்த பணம் செல்வம் எல்லாம் வீண் தானே.

இத்தனை சம்பாதிப்பதற்கு காரணமே குடும்பத்தாரின் மகிழ்ச்சியையும் அவர்களின் தேவைகளை நிறைவேற்ற கொள்ளத் தான். இத்தனை செய்தும் அங்கே நிம்மதி இல்லாமல் எப்போதும் சண்டை சச்சரவாக இருந்தால் வாழ்க்கையே போராட்டமாக மாறி விடும் அல்லவா.

பொதுவாக பெரும்பான்மையான மக்களிடையே இவ்வகையா தோற்றப்பாடு குடும்பத்தில் காணப்படும். இவை எல்லாம் மாறி குடும்பத்தில் எப்பொழுதும் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைந்து இருக்க ஆன்மீகத்தில் ஒரு சில பரிகாரங்கள் சொல்லப்பட்டிருக்கிறது.

 அதில் ஒன்றான நாயுருவி செடி பரிகாரம் பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

images/content-image/1706254246.jpg

 நாயுருவி செடி இது அநேகமான ஆன்மீக பரிகாரங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்தச் செடியின் வேரை முறைப்படி பூஜை செய்து வைக்கும் போது பணவரவையும் அதிகரிக்க கூடிய ஆற்றலை தர வல்லது.

 இந்த செடியானது இருக்கும் இடத்தில் சகல குடும்ப மகிழ்ச்சியுடன், பணவரமும் நிலைத்து இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிலைக்க இந்த நாயுருவி செடியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை பார்க்கலாம்.

 இந்த நாயுருவி செடியை வெளியில் எங்கு இருந்தும் கொண்டு வரக் கூடாது. பணம் கொடுத்து கார்டனில் வாங்க வேண்டியது மிகவும் முக்கியம். இப்படி வாங்கும் வாங்கும் போது உங்கள் வீட்டில் இருக்கும் யாருக்கும் சந்திராஷ்டமம் இல்லாமல் இருக்க வேண்டும் 

அதுவும் மிகவும் முக்கியம். அதே போல் இந்தச் செடி வாங்க உங்களுக்கு ராசியான நாள் எதுவோ அதையே தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம். இந்த நாளில் தான் வாங்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. இந்த செடியை வாங்கும் தினத்தில் சூரிய ஓரை இருக்கும் நேரத்தில் இதை நீங்கள் பணம் கொடுத்து வாங்கி வீட்டிற்கு கொண்டு வர வேண்டும் இது தான் மிகவும் முக்கியம்.

images/content-image/1706254315.jpg

 இப்படி வாங்கி வந்த இந்த செடியை வீட்டில் வடகிழக்கு மூலையில் வைக்க வேண்டும் இந்த திசையும் மிகவும் முக்கியம் அதையும் கவனமாக பார்த்து வைத்து விடுங்கள். இதை வீட்டில் வைத்த உடன் கொஞ்சம் மஞ்சள் கலந்த தண்ணீரை தெளித்து விட்டு நீங்கள் எப்போதும் போல இந்த செடிக்கு தண்ணீர் ஊற்றி பராமரித்து வளர்த்து வாருங்கள். 

இந்த செடியானது எப்படி செழித்து வளர்கிறதோ அது போல உங்கள் குடும்பத்தில் இருக்கும் துன்பங்கள் துயரங்கள் எல்லாம் மறைந்து சந்தோசம் தழைத்து வளர்ந்து பணவரவு அதிகரித்து நிம்மதியான சூழ்நிலையில் வாழக்கூடிய யோகத்தை இது உருவாக்கிக் கொடுக்கும்.

எனவே இந்த அற்புத ஆன்மீக செடியை மேற்கூறியவாறு வளர்த்து நீங்களும் சந்தோஷமான வாழ்க்கையை குடும்பத்துடன் வாழ்ந்து நிம்மதியாக இருக்கலாம் என்று தகவலை தந்து இவ்வாய்வை  முடிக்கின்றோம்.