பொருளாதாரத்தில் மேலோங்கி பொற்காலமாகவிருந்த மொகலாய பேரரசின் வரலாறு!

#India #Delhi #history #Development #War #Lanka4 #economy #Gold #Agriculture
Mayoorikka
9 months ago
பொருளாதாரத்தில் மேலோங்கி  பொற்காலமாகவிருந்த மொகலாய பேரரசின் வரலாறு!

பழங்கால சாம்ராஜ்யங்கள் குறித்து பேசும்பொழுது அதன் பெருமை மற்றும் பிரமாண்டம் ஆகியவை நம் மனதில் தோன்றுகிறது.

 நமது மூதாதையர்கள் வாழ்ந்த அரண்மனைகள் என்பது, அந்தக் காலத்தின் அரசர்கள் மற்றும் மகாராணிகள் ஆகியோரின் வாழ்க்கை முறைகளின் சாட்சியாக இருக்கின்றன. அப்படி ஒரு ஆர்வத்தைத் தூண்டக்கூடிய ஒரு சாம்ராஜ்யம் தான் முகலாய பேரரசு காலம் இருக்கின்றது. 

காலத்தின் தேவை அறிந்து வாருங்கள் #லங்கா4 ஊடகம் வாயிலாக முகலாய பேரரசின் வரலாற்றை திரும்பிப் பார்ப்போம்.

 இந்திய துணைக்கண்டத்துக்கு உட்பட்ட தற்போதைய இந்தியா, ஆப்கானித்தான், பாக்கித்தான், வங்கதேசம் போன்ற நாடுகளின் பெரும் பகுதிகளை உள்ளடக்கிய பேரரசாக இருந்ததே முகாலாயப் பேரரசு. 

 முகலாயப்பேரரசை நிறுவியவர் பாபர். கி. பி. 1526 தொடக்கம் முதல் 1712 வரையான காலப்பகுதியில் இந்த அரசு நிலைபெற்றிருந்தது. 

 துருக்கிய-பாரசீக/ துருக்கிய-மங்கோலிய தைமூரியத் தலைவனான பாபர், 1526 ஆம் ஆண்டில் கடைசி டில்லி சுல்தானான, இப்ராஹிம் லோடி என்பவரை, முதலாவது பானிபட் போரில் தோற்கடித்து முகலாய அரசைத் தோற்றுவித்தார். 

 முகலாயர் இஸ்லாம் சமயத்தைச் சேந்தவர்கள் முகலாய ஏகாதிபத்திய அமைப்பானது 1600 களில் பாபரின் பேரன் அக்பர் ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்டதாகவே அறியப்படுகிறது.

ஏகாதிபத்திய அமைப்பு கி. பி. 1720 வரை நீடித்தது. முகலாயப் பேரரசின் கடைசி முக்கியமான பேரரசரான அவுரங்கசீப்பின் இறப்பிற்கு பிறகு சிறிது காலம் வரை நீடித்தது ஏகாதிபத்திய அமைப்பு கி. பி. 1720 வரை நீடித்தது. 

முகலாயப் பேரரசின் கடைசி முக்கியமான பேரரசரான அவுரங்கசீப்பின் இறப்பிற்கு பிறகு சிறிது காலம் வரை நீடித்தது. முகலாயர்கள் தங்களை நகைகளால் அலங்கரித்துக்கொள்ள விரும்பினர். 

தலையில் இருந்து கால் வரை, அரசர்கள், ராணிகள் மற்றும் அரச குடும்பங்களில் உள்ள மற்றவர்கள் ஆகியோர் தங்கம் மற்றும் விலையுயர்ந்த நகைகளை அணிந்திருந்தனர். எனினும், என்ன வகையான தங்க நகைகள் முகலாயர்களின் பொக்கிஷத்தில் இருந்தது? முகலாயர்கள், அவர்களுக்கு முன்பிருந்த ஆட்சியாளர்களால் ஈர்க்கப்பட்டனர். அதனாலேயே, அவர்களின் நகைகள் இஸ்லாமிய மற்றும் இந்து மதக் கலை வடிவங்களின் கலவையாக இருந்தன.

 மொகலாயர்கள் ஆட்சியை நோக்கும்பொழுது, சுமார் 3 நூற்றாண்டுகளுக்கு மேலாக இந்தியாவை ஆட்சி செய்த இவர்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து இந்திய உபகண்டத்தில் பெரும் பகுதி முழுவதையும் தமதாட்சியின் கீழ் கொண்டு வந்தார்கள். 

இவர்கள் இந்தியாவின் அரசியல், பொருளாதார, சமய, சமூக மாற்றங்களுக்கு தமது பெரும் பங்களிப்பைச் செய்துள்ளனர். முகலாயப் பேரரசு உச்ச நிலையில் இருக்கும்பொழுது, அக்காலத்தில் பாரதம் என்று அழைக்கப்பட்ட இந்தியாவின் பெரும் பகுதியையும், ஆப்கானிஸ்தானின் ஒரு பகுதி, பாகிஸ்தான் என்பவற்றையும் உள்ளடக்கிய பேரரசாக அது இருந்தது. 

கிபி 1526 தொடக்கம், 1712 வரையான காலப்பகுதியில் இந்த அரசு நிலைபெற்றிருந்தது. துருக்க-பாரசீக அல்லது துருக்க-மங்கோலிய திமுரிட் தலைவனான பாபர், 1526 ஆம் ஆண்டில் கடைசி டில்லி சுல்தானான இப்ராஹிம் லோடி என்பவரை, முதலாவது பானிபட் போரில் தோற்கடித்து முகலாய அரசைத் தோற்றுவித்தார்.  

இவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட முஸ்லிம்களாவர். இந்தியாவில் இஸ்லாமிய ஷரீஅத் அமைப்பிலான ஆட்சியை முகலாயர் தமதாட்சிக் காலத்தில் ஏற்படுத்தினர். இவர்களது ஆட்சியின் கீழ் இவர்கள் பின்பற்றிய சமயப் பொறை காரணமாக மக்கள் சுதந்திரமாக வாழ்ந்தனர். 

images/content-image/2023/01/1706330327.jpg

நீண்ட கால ஆட்சியொன்றை முகலாயர் தொடர்வதற்கு அவர்கள் பின்பற்றிய சமய சகிப்புத் தன்மையே காரணமாக அமைந்தது எனலாம். இவர்களது இராணுவத்தில் சேர்ந்திருந்த முஸ்லிமல்லாதோருக்கு ஜிஸ்யாவிலிருந்தும் விலக்களிக்கப்பட்டிருந்தது. முகலாயராட்சியில் இஸ்லாமிய கலாசார முறை நன்கு பேணப்பட்டது. 

முஸ்லிம்கள் மட்டுமன்றி முஸ்லிமல்லாதோரும் கலாசார நடைமுறைகளிலும் பண்பாட்டு அம்சங்களிலும் இஸ்லாமிய நடைமுறைகளையும் பின்பற்றியது மட்டுமன்றி அதனை ஒரு கௌரவமாகவும் கருதினர்.

 சாதிப்பாகுபாடு நிறைந்திருந்த இந்தியாவில் சமத்துவத்தை நிலை நாட்ட முகலாயர் சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டனர். இதனால் கவரப்பட்டுத்தான் இந்துக்களில் அதிகமானோர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர். 

இதற்கு மாறான வேறெந்த வழிமுறையாலும் இஸ்லாம் அங்கு பரவவிலை. துருக்கியில் கலீபா சுலைமானும் பிரான்ஸை 1ம் ஃபிரான்சிஸ்ஸும் ஜெர்மனியை 5ம் சார்ல்ஸ்ஸும் இங்கிலாந்தை 8ம் ஹென்றியும் ஆரசோச்சிய காலத்தில் இந்தியாவை ஆட்சி செய்தவரே பாபராவார். 

இவர்களோடு பாபரை ஒப்பிடும்போது பாபர் மிகச் சிறந்த வீரராகவும் கலைஞராகவும் அறிஞராகவும் விளங்குகிறார். இதனால்தான் வின்ஸ்ஸன் ஸ்மித் போன்றவர்கள் இவரை 16ம் நூற்றாண்டில் ஆசியாவிலேயே தலை சிறந்த ஆட்சியாளர் என சிலாகித்துக் கூறுகின்றனர். 

மனிதாபிமானம் மிக்க இவர் தனது நண்பர்களைப் போற்றினார்; உறவினர்களை நல்வழிப்படுத்தினார். இந்தியாவின் மீது படையெடுத்துக் கொள்ளையடித்துச் சென்ற முன்னோர்களைப் போலல்லாமல் நிரந்தர ஆட்சி அமைத்து மக்களுக்கு நிலையான வாழ்வு தந்தார்.

 அவரது சகோதரர் நஸீர் மிர்ஸா அவருக்குப் பல தொல்லைகள் தந்த போதிலும் பாபர் தன்னம்பிக்கையோடு செயலாற்றினார். எது நடப்பினும் அது ஆண்டவன் செயல் என்று இருப்பார். 

தோல்வியைக் கண்டு துவண்டு விடாமலும் வெற்றியைக் கண்டு சோம்பியிராமலும் தன் செயல்களை சீர்பட நடத்தினார்.

 அடுத்துஆட்சியை நடத்தியவர் ஹுமாயூன் இந்தியாவில் முகலாயப் பேரரசை நிறுவிய பாபரின் மூத்த மகனாகிய இவரது இயற் பெயர் நாஸிருத்தீன் ஹுமாயூன் என்பதாகும். 1508ல் காபூலில் பிறந்த இவரது தாயின் பெயர் மஹிம் பேகம் என்பதாகும். 

சிறு வயதிலேயே அரபு, ஃபார்ஸீ, துருக்கி முதலாம் மொழிகளையும் சோதிடம், கணிதம் போன்ற கலைகளையும் கற்றுத் தேர்ந்தார். 1540ல் கன்னோசிப் எனும் போரில் ஷெர்ஷாஹ் என்பவர் ஹுமாயூனைத் தோற்கடித்ததால் அவர் ஆட்சியை இழந்தார். 1555ல் ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் வரை ஊரூராக உதவி கேட்டு அலைந்து திரிந்தார். இக்காலங்களில் (1540 - 1555) அவரது சகோதரர்கள்கூட அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. 

இறுதியில் பாரசீகரின் உதவியோடு மீண்டும் டில்லியைக் கைப்பற்றினார். பல ஆண்டுகளுக்குப் பின்னர் ஹுமாயூன் ஆட்சியை மீண்டும் கப்பற்றியபோதும் அரச வாழ்க்கையை அனுபவிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிட்டவில்லை. 

1556ல் ஒரு நாள் வாசிகசாலையில் இருந்து மாடிப் படிகளில் இறங்கிக் கொண்டிருந்தபோது நினைவிழந்து கீழே விழுந்தார். மறு நாள் மரணமானார். இவர் மரணித்தபோது மகன் அக்பர் போர் முகாமொன்றில் வெகு தொலைவில் இருந்தார்.

 அக்பர் வந்து சேரும்வரை சுமார் 17 நாட்கள் ஹுமாயூனின் மரணம் வெளி உலகிற்குத் தெரியாதிருந்தது. அக்பர் வந்து சேர்ந்த பிற்பாடே அவர் நல்லடக்கம் செய்யப்பட்டார்.

 அடுத்து ஆட்சி செய்தவர் அக்பர் இந்தியாவில் அரசாண்ட சிறப்புமிக்க அரசர்களுள் அக்பரும் ஒருவர். அளப்பரிய அல்லல்களுக்கிடையில் பிறந்து வளர்ந்து, படிக்காத மேதையாகி, வீரனாகவும் விவேகியாகவும் வாழ்ந்து பேரரசு ஒன்றை அமைத்து எம்மதமும் சம்மதம் என்ற சமயப் பொறையுடன் செங்கோலோச்சிய ஒருவர் இவர்.

 இந்தியாவிலிருந்த இரு பெரும் மதங்களான இந்து மதத்தையும் இஸ்லாத்தையும் இணைக்கும் ஒரு பாலமாக அமைந்து, காலமெல்லாம் இருந்துவந்த மதப் பூசல்களுக்கு முடிவவு காண முயன்ற விந்தை மனிதர் இவர். 

களத்தில் தோல்வியே கண்டிறாதவர். சுமார் 50 வருடகால ஆட்சியின் பின்னர் மன்னர் அக்பர் தனது 63ம் வயதில் காலமானார். இவரது அடக்கவிடம் ஆக்ராவிலுள்ள சிக்கந்தரா எனுமிடத்தில் அமையப் பெற்றுள்ளது .

 அடுத்து ஜஹாங்கீர் ஆட்சி அக்பர் இறக்கும்போது தனது புத்திரர் ஸலீம்தான் தனக்குப் பின்னர் ஆட்சியாளராக வரவேண்டுமென விரும்பினார். 

இதன்படி 1605ல் (ஒக்டோபர் 21)நூருத்தீன் முஹம்மத் ஜஹாங்கீர் பாதுஷா காழி எனும் பட்டப்பெயரோடு இவர் ஆட்சியில் அமர்ந்தார். பதவிக்கு வந்த ஜஹாங்கீர் ஆரம்பமாகப் பல சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டார். 

 அவற்றுள் பன்னிரு கட்டளைகள் (துஸ்தூருல் அமல்) என்ற பெயரிலவர் வெளியிட்ட அறிக்கை முக்கியமானதாகும். இதற்கு மேலாக அவர் ஆற்றிய பணிகளைப் பின்வருமாறு நோக்கலாம். 1. கைதிகளை விடுதலை செய்தார். 2. அவரது பெயர் பொறிக்காப்பாட்டு நாணயங்கள் வெளியிடப்பட்டன. 3. நீதி வழங்குவதில் அதிக கவனம் செலுத்தினார். 4. ஆக்ரா கோட்டையில் ஒர் ஆராய்ச்சி மணியைத் தொங்கவிடார். 

பொற் சங்கிலியொன்று அந்த மணியோடு இணைக்கப்பட்டிருந்தது. நீதி வேண்டுவோர் அந்தப் பொற்சங்கிலியை அசைத்து மணியோசை செய்தால் அரசர் நேரில் வந்து அவர்தம் குறைகளைத் தீர்த்து வைத்து முறை வழங்குவார்.

 எல்லையற்ற அதிகாரங்களோடு நடந்து கொண்டதால் குர்ரம் புரட்சி செய்தார். ஜஹாங்கீர் அளவுக்கு மீறி மதுவருந்தியதால் உடல் நலம் குன்றி நோய்வாய்ப்பட்டார். ஓய்வுக்காக காஷ்மீர் சென்றார். அங்கு கி.பி.1627ல் காலமானார். மனைவி நூர்ஜஹான் 1645ல் காலமானார்.

 அடுத்தது ஷாஹ்ஜஹான் ஆட்சி இவர் அக்பரின் முகச்சாயலைப் பெற்றிருந்தார். பாரசீக மொழியில் ஆர்வம் காட்டிய ஷாஹ்ஜஹான்; அரசியல், சமயம், மருத்துவம் முதலாம் துறைகளை விரும்பிக் கற்றார்.

 1610ல் மீர்சா எனும் பெண்ணையும் 1612ல் அர்ஜுமந்த் பானு பேகம் எனும் பெண்ணையும் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மேலதிகமாகத் தனது அந்தப்புரத்தில் இருந்த பல பெண்கள் ஷாஹ்ஜஹானின் நெஞ்சத்தில் உலா வந்தனர்.

 ஷாஹ்ஜஹானின் ஆட்சிக் காலத்தை முகலாய ஆட்சியின் பொற்காலம் என்பர். இக்காலத்தில் ஆட்சி செழிப்புற்று ஓங்கியது. பொன்னும் பொருளும் காண்போரை மலைக்கச் செய்தன. தாஜ்மஹல், முத்து மசூதி, அலிமசூதி முதலியவை அவரது ஆட்சியின் அடையாளங்களாக விளங்குகின்றன. 

டெல்லி, லாகூர், காஷ்மீர் முதலாம் இடங்களில் அமைக்கப்பட்ட எழில் மிகு பூங்காக்கள் இவருக்கு தோட்டக் கலையிலும் மலர்களிலும் இருந்த ஆர்வத்தை எடுத்துக்காட்டுகின்றன. தைமூரின் வழிவந்த முகலாயரின் வழித்தோன்றலில் ஷாஹ்ஜஹானே ஆட்சித் திறனிலும் கருவூலத்தைக் கட்டிக் காப்பதிலும் நிலவரிச் சீர்திருத்தங்கள் செய்வதிலும் படை வீரர்கள், அதிகரிகளின் திறமைகளைக் கண்டறிவதிலும் சிறந்தவராக விளங்கினார். 

குடி மக்களுக்கு துன்பம் விளைவித்த கவர்னர்களையும் இதர அதிகாரிகளையும் பதவி நீக்கம் செய்ததால் ஆட்சியில் அமைதி நிலவியது. ஷாஹ்ஜஹான் ஆட்சியில் இந்துக்கள் உயர் பதவிகளில் அமர்த்தப்பட்டனர். 

அவரது மகன் தாரா இந்துக்களோடு நெருங்கிப் பழகினார். இருப்பினும் இவரது ஆட்சியை சமயப் பொறையுடன் கூடிய ஆட்சிதான் என்று கூறுவதற்கில்லை. கலை, இலக்கியத் துறையிலும் இவர் அதிக ஈடுபாடு காட்டினார். அவரே ஓர் இலக்கியவாதியாக இருந்ததால் ஏராளமான அறிஞர்களை ஆதரித்தார்.

 பாரசீக இலக்கிய வளர்ச்சியில் இவரது பங்கு மகத்தானது. கட்டடக் கலையில் பெரிதும் ஆர்வம் காட்டிய இவர், தாஜ்மஹல், முத்து மசூதி, ஜாமிஆஹ் மஸ்ஜித், செங்கோட்டை, ஷாஹ்ஜஹான்பாத் (ஆக்ராவிலிருந்து மாற்றப்பட்ட புதிய தலை நகர் - டில்லி) முதலானவற்றை நிருமாணித்தார். மயிலாசனத்தை ஏழே ஆண்டுகளில் செய்து முடித்து அதன்மீது வீற்றிருந்து ஆட்சி செலுத்தினார். 

கவிஞர்களை ஆதரித்தார். குத்ஸி என்ற கவிஞரின் வாயில் மூன்று முறை தங்கக் காசுகாச்களை நிரப்பிக் கௌரவித்தார். இசைக் கலையின் வளர்ச்சியிலும் பெரிதும் ஊக்கமளித்தார்.

 இவ்வளவு சிறப்புக்களையும் பெற்றிருந்த ஷாஹ்ஜஹான் தான் இறப்பதற்கு முன்பு தனது மகன் ஔரங்கசீப்பாலும் சிறைக்காவலன் முதாமத் என்ற கொடியவனாலும் பல அவமானங்களுக்கு உள்ளாக்கப்பட்டு குடிக்கத் தண்ணீர் கூட இல்லாத நிலையில் உயிர் நீத்தார். 

 அடுத்தது ஒளரங்கஸீப் சக்கரவர்த்தி ஷாஹ்ஜஹானின் மூன்றாவது மகனான இவர் 1618ல் தோஹாத் எனுமிடத்தில் பிறந்தார். ஸஅதுல்லாஹ்கான், பீர் முஹம்மது ஹாஷிம் ஜெய்லானி, முல்லா ஜீவன், முஹம்மது கானோஜி, அப்துல் ஹமீத் சுல்தான்பூரி முதலானோர் இவரின் இளமைக் கால ஆசான்களாவர். ஔராங்கஸீபின் ஆழ்ந்த மார்க்கப் பற்றுத்தான் அவருக்கு எதிரியாகவும் அமைந்தது. 

அக்பரின் சீர்திருத்தங்களால் இஸ்லாத்தின் சிறப்புக் குன்றியிருப்பதாகவும் இந்துக்கள் செல்வாக்கு மிகுந்து காணப்படுவதாகவும் கருதிய அவர் அந் நிலையை மாற்ற முயன்று ஈற்றில் தோற்றுப் போனார். கொடியவர் - கொடுமைக்காரர் என்று அறியப்பட்ட ஔராங்கஸீப், பொது வாழ்வில் எவ்வளவு தூய்மையானவராக இருந்தார் என்பதற்கு அவர் எழுதிய கடைசி உயில் சாட்சியாகிறது.

 "என் கைகளால் தைக்கப்பட்ட குல்லாய்களை விற்ற பணம் 4 ரூபாய் 2 அணா, என் தலையணைக்குக் கீழ் இருக்கின்றன. நான் இறந்த பின்னர் எனது உடல் மீது போர்த்துவதற்குத் துணி வாங்க அதைப் பயன்படுத்துங்கள்.'

 இந்த உயில் எழுத்து ஔராங்கஸீப் மீதிருந்த அத்தனை அழுக்குகளையும் சலவை செய்து விடுகிறது." 13 நாட்கள் நோய்வாய்ப்பட்டுக் கிடந்த இவர் கி.பி.1707ம் ஆண்டு மரணமானார். 

இவரது விருப்பப்படியே எவ்விதமான ஆடம்பரமுமின்றி தௌலதாபாத் எனுமிடத்தில் இவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

 இவ்வாறாக பல மன்னர்களின் ஆட்சியில் பொற்காலமாகவும் அதிகப்படியான தொழில்நுட்பம், கலை , கட்டுமானம், பொருளாதாரத்தில் மேலோங்கியிருந்த மொகலாய பேரரசு வீழ்ச்சியை நோக்கித் தள்ளப்பட்டது. 

1970களில் இருந்து வரலாற்றாளர்கள் வீழ்ச்சி பற்றி பல்வேறு கோணங்களில் கூறியுள்ளனர். ஆளும் வர்க்கத்தில் ஏற்பட்ட சீரழிவு, அதிகப்படியான ஆடம்பரம் மற்றும் அதிகரித்துக் கொண்டு வந்த குறுகிய மனப்பான்மைகள் ஆகியவை வெளிப்புற சவால்களுக்கு ஆட்சியாளர்களை தயார் இல்லாதவர்களாக ஆக்கியிருந்தது பேரரசின் செழிப்பானது மாகாணங்கள் அதிகப்படியான தன்னாட்சியை அடைய உதவிகரமாக இருந்தது. இதனால் ஏகாதிபத்திய அவையானது பலவீனம் அடைந்து விச்சியடைந்தமை துர்பாக்கியநிலையே.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!