இவ்வருட IPL 2024 தொடரின் ஆரம்ப திகதி அறிவிப்பு
ஐபிஎல் 2024 தேதிகள் கிரிக்கெட் 2024 திகதி மார்ச் 22-ம் தேதி தொடங்கி மே 26-ம் திகதி வரை நடைபெறும் என கூறப்படுகிறது.
நாடாளுமன்ற தேர்தல் தேதிகள் இறுதி செய்யப்பட்ட பின்னர் இது தொடர்பான இறுதி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல்கள் இருந்தாலும் ஐபிஎல் போட்டிகள் முழுதும் இந்தியாவிலேயே நடைபெறும் என்றுதான் தெரிகிறது.
இது தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பிசிசிஐ நிர்வாகி கூறியதாக வெளியான செய்தியில், “நாங்கள் ஐபிஎல் அட்டவணை பற்றி விவாதித்தோம். பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு திகதிகள் குறித்து உள்துறை அமைச்சகம் மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்திடமிருந்து தகவலுக்காகக் காத்திருப்பது தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. தேர்தல்கள் ஐபிஎல் நேரத்தில் வரக்கூடும்.
“இந்திய மைதானங்களில்தான் நடைபெறும் இது பற்றி எந்த கேள்வியும் இல்லை. வேறு நாட்டுக்கு மாற்றுவது என்ற யோசனையும் இல்லை. வாக்குப்பதிவுத் தேதிகளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.
ஏனெனில் அதன் அடிப்படையில் பாதுகாப்பு மற்றும் இதர ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்து, அங்கிருந்து அதை முன்னெடுத்துச் செல்வோம். முழுப் போட்டியையும் இந்தியாவில் நடத்துவதில் நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுடனும் விரைவில் பேச்சு வார்த்தை நடத்துவோம்” என்றார். மகளிர் பிரிமியர் லீக் டி20 போட்டிகளுக்கான தேதி இன்னும் சில நாட்களில் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
மகளிர் பிரிமியர் லீக் பிப்ரவரி 22 முதல் மார்ச் 17-ம் தேதி வரை நடைபெறுகிறது. போட்டிகள் பெங்களூரு, டெல்லி ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது.