பிரான்ஸில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிரத்து வருகிறது

#France #அதிகம் #புற்றுநோய் #லங்கா4 #cancer #பிரான்ஸ் #lanka4Media #lanka4_news #லங்கா4 ஊடகம் #lanka4.com #Lanka4 france tamil news
பிரான்ஸில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிரத்து வருகிறது

பிரான்சில் அண்மைக்காலமாக மார்பக, பெருங்குடல், கர்ப்பப்பை மற்றும் வாய்ப் புற்றுநோய்கள் அதிகரித்து வருவதாக அரச மருத்துவ காப்புறுதி (Assurance-maladie) மற்றும் புற்றுநோய்க்கு எதிரான அமைப்பு (Institut national du cancer) இரண்டும் கூட்டாக அறிக்கை ஒன்றினை நேற்று வெளியிட்டுள்ளன.

 தாங்கள் முன்னெடுத்த புற்றுநோய்க்கு எதிரான பிரச்சாரங்கள் 80% சதவீதம் கிழ் நோக்கி செல்வதாகவும், இதற்கு மக்களின் அசமந்தப் போக்கே காரணம் என்றும் தெரிவித்துள்ளன. மக்களுக்கு தாங்கள் அவர்களின் வயதெல்லையை கருத்தில் கொண்டு அனுப்பப்படும் பத்திரங்களை 70% சதவீதமான பிரஞ்சு மக்கள் கிழித்து எறிந்து விடுகிறார்கள். 

images/content-image/1706513527.jpg

முதற்கட்ட பரிசோதனைகளை அவர்கள் செய்வதில்லை, ஆரம்ப நிலையில் கண்டறியும் போது அதற்க்கான சிகிச்சையை வழங்கும் வலு பிரான்ஸ் மருத்துவத் துறையில் பலமாக உள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

 மக்கள் விழிப்புணர்வு இல்லாது இருப்பது தமக்கு கவலையளிக்கிறது, புற்றுநோயின் கடைசிக் கட்டத்திலேயே மக்கள் மருத்துவமனைளை நாடுகிறார்கள், அதனால் அவர்களை காப்பாற்ற முடியாமல் போகிறது எனவும் அரச மருத்துவ காப்புறுதி (Assurance-maladie) மற்றும் புற்றுநோய்க்கு எதிரான அமைப்பு (Institut national du cancer) தெரிவித்துள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!