ஒலிம்பிக் போட்டி நடக்கும் காலங்களில் காவற்துறை அதிகாரிகள் விடுமுறை எடுக்க முடியாது.

#Police #France #France Tamil News #Olympics #leave
Mugunthan Mugunthan
7 months ago
ஒலிம்பிக் போட்டி நடக்கும் காலங்களில் காவற்துறை அதிகாரிகள் விடுமுறை எடுக்க முடியாது.

ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் காலத்தில் காவல்துறையினர் விடுமுறை எடுத்துக்கொள்ள முடியாது என உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

 அதேவேளை மேலதிக கொடுப்பனவுகளையும் அறிவித்துள்ளார். ஒலிம்பிக் போட்டிகளின் போது காவல்துறையினர் சிறப்பு கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். பத்து மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகளின் வருகை எதிர்பார்க்கப்பட்டுள்ளதால், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

images/content-image/1706713133.jpg

 அதையடுத்து சிறப்பு கண்காணிப்பில் ஈடுபடும் காவல்துறையினருக்கு 1,900 யூரோக்கள் வரை சிறப்பு கொடுப்பனவுகள் வழங்கப்படும் என உள்துறை அமைச்சர் Gérald Darmanin, இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.

 அதேவேளை, ஜூலை 24 ஆம் திகதியில் இருந்து ஓகஸ்ட் 11 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட மாட்டாது எனவும் அவர் அறிவித்துள்ளார். விடுமுறையினை எடுக்காமல் கடமையாற்றும் காவல்துறையினருக்கே மேற்படி கொடுப்பனவுகள் வழங்கப்பட உள்ளன.