IA தொழில் நுட்பத்தில் போலியான செய்திகளை உருவாக்கி வெளியிடுவோரின் செய்திகளை நம்பவேண்டாம் பிரான்ஸ் எச்சரிக்கை.

#France #mafia #news #France Tamil News
Mugunthan Mugunthan
7 months ago
IA தொழில் நுட்பத்தில் போலியான செய்திகளை உருவாக்கி வெளியிடுவோரின் செய்திகளை நம்பவேண்டாம் பிரான்ஸ் எச்சரிக்கை.

பிரான்சின் நம்பகமான செய்திகளை வெளியிடும் தொலைக்காட்சி சேவைகளான TF1, France2, BFMTV, France 24, RMC போன்ற தொலைக்காட்சி சேவைகளின் செய்தி அறிக்கைகளின் ஒலி, ஒளி காட்சி படிமங்களை பிரதி எடுத்து (l’intelligence artificielle IA) செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி அதில் தவறான செய்திகளை புகுத்தி சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படுகிறது என எச்சரிக்கப்பட்டுள்ளது.

 இந்த போலியான பதிவுகளை தயாரித்து வெளியிடும் நபர்கள் நாள் ஒன்றுக்கு சுமார் 850 யூரோக்கள் முதல் 2100 யூரோக்கள் வரை சம்பாதிக்கின்றனர், இவர்களின் போலியான செய்திகளை நம்பி பல சமுகவலைத்தள ('YouTubers') செய்தியாளர்களும் தங்கள் பதிவுகளை செய்வதினால் தவறான அல்லது போலியான தகவல்கள் மக்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 எனவே சரியான செய்திகளை அறிந்து கொள்ள சமூக வலைத்தளங்களை பின்தொடராமல் அந்தந்த ஊடகங்களின் இணையத்தளங்களை பின்தொடருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.