கரைச்சி தெற்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் 53வது ஆண்டு நிறைவையொட்டி நடைபெறவிருக்கும் செயற்பாடுகள்
#SriLanka
#Kilinochchi
#celebration
#Prize
Mugunthan Mugunthan
9 months ago
கரைச்சி தெற்கு பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் 53வது ஆணடு நிறைவை முன்னிட்டு அங்கத்தவர்களை வலுப்படுத்தும் வகையிலும், வாடிக்கையாளர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும், பணியாளர்களின் திறனை விருத்திசெய்யும் வகையிலும் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அவை
- புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளுதல்
- அங்கத்தவர்கள் பங்குபற்றும் வகையில் 19 கிளைக்குழுக்களுக்கும் இடையில் ஆண், பெண் இருபாலாருக்குமான கயிறு இழுத்தல் போட்டியினை நடாத்தி முதல், இரண்டாம் இடங்களை பெறும் அணிக்கு கூட்டுறவு பரிசுச்சீட்டு வழங்குதல்
- சுய தொழிலில் ஈடுபடும் மகளிர் அங்கத்தவருக்கு விரைவாக வழங்கக்கூடிய கூட்டுறவுக்கரம் இலகு கடன் திட்டத்தினை அறிமுகம் செய்து வழங்குதல்
- கிராமிய வங்கிகளில் சேமிப்பினை பேணும் அங்கத்தவர்களில் ஒவ்வொரு கிராமிய வங்கியிலும் 2023 ஆம் ஆண்டின் சிறந்த சேமிப்பாளரை தெரிவு செய்து 3000.00 ரூபா பெறுமதி உடைய கூட்டுறவு பரிசுச்சீட்டு வழங்குதல்
- கோப்சிற்றிகளில் 5000 ரூபாவிற்கு மேல் ( 2024 மாசி 01 ஆம் திகதி தொடக்கம் 07ஆம் திகதி வரை) கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களில் குலுக்கல் முறையில் ஒவ்வொரு வாடிக்கையாளரை தெரிவு செய்து 5000 ரூபா பெறுமதியுடைய கூட்டுறவு பரிசுச்சீட்டு வழங்குதல்.
- பணியாளர்களுக்கு பொது அறிவுப்போட்டியினை நடாத்தி புள்ளி அடிப்படையில் முதல் மூன்று இடங்களை பெறுபவர்களுக்கு சான்றிதழ் வழங்குதல். என்பனவாகும்.
மேலும் இவ்விழாவிற்கான இறுதி நாள் நிகழ்வுகள் 08-02-2024 வியாழக்கிழமை பி.ப 2.00 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவுச் சபை மண்டபத்தில் நடைபெறும்.