செங்கடலில் பதற்றம். பிரான்ஸ் வர்த்தக கப்பலுக்கு இடையூறு. பயத்தில் பிற நாட்டுக் கப்பல்கள்

#France #Ship #France Tamil News #Terrorists #RedSea
செங்கடலில் பதற்றம். பிரான்ஸ் வர்த்தக கப்பலுக்கு இடையூறு.  பயத்தில் பிற நாட்டுக் கப்பல்கள்

செங்கடலில் பயணிக்கும் வர்த்தக கப்பல்கள் மீது ஆயுதக்குழு தொடர்ச்சியாக தாக்குதல் மேற்கொண்டுவருவதாகவும், இதனால் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 கடந்த இரண்டு மாதங்களாக மத்தியகிழக்கின் செங்கடல் மீது இந்த நிலை தொடர்கிறதாகவும், Houthi போராட்டக்குழு தொடர்ச்சியாக ட்ரோன் தாக்குதல்கள் மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது. 

images/content-image/1707121462.jpg

பிரான்சின் Le Havre துறைமுகத்தில் இருந்து தென்னாப்பிரிகா நோக்கிச் செல்லும் கப்பல்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறது. தற்போது போக்குவரத்துக்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த பதற்ற நிலை 60 நாட்களுக்கு மேலாக தொடர்கிறதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 இஸ்ரேஸ்-பாலஸ்தீன பிரச்சனையில், ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் இஸ்ரேல் பக்கம் நிற்பதாகவும், அவர்களுக்கு ஆயுதம் வழங்குவதாகவும், அவர்களது போர்க்குற்றங்களை மறைப்பதாகவும் தெரிவித்து, பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இந்த Houthi ஆயுத போராட்டக்குழு செங்கடலில் பயணிக்கும் கப்பல்களை மூர்க்கத்தனமாக தாக்கி வருகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!