தீவிரவாதத்துக்கு எதிராக களமிறங்கும் கனடா. இஸ்லாமியர்கள் எதிர்ப்பு.

#Canada #Attack #Canada Tamil News #Terrorists #Houthi
Mugunthan Mugunthan
3 months ago
தீவிரவாதத்துக்கு எதிராக களமிறங்கும் கனடா. இஸ்லாமியர்கள் எதிர்ப்பு.

யேமனில் ஹவுதி போராளிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களுக்கு கனடா உதவிகளை வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானியாவும் அமெரிக்காவும் கூட்டாக இணைந்து சவுதி போராளிகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.

 செங்கடல் பகுதியில் சவுதி போராளிகள் வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்திய வருகின்றன. பாலஸ்தீனம் மீதான போரை நிறுத்திக் கொள்ளுமாறு கோரி ஹவுதி போராளிகள் இந்த தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

 இந்த தாக்குதல்களை தடுக்கும் நோக்கில் அமெரிக்காவும் பிரித்தானியாவும் யேமனில் அமைந்துள்ள ஹவுதி நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதல்களுக்கு அவுஸ்திரேலியா, டென்மார்க், நெதர்லாந்து, நியூசிலாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளன.

images/content-image/1707122377.jpg

 இது தொடர்பில் கனடிய அரசாங்கம் கூட்டு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. நேரடியான உதவிகள் அன்றி திட்டமிடல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் கனடா பங்களிப்பினை வழங்கி வருவதாக தெரிவித்துள்ளது. நேரடியான உதவிகள் அன்றி திட்டமிடல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் கனடா பங்களிப்பினை வழங்கி வருவதாக தெரிவித்துள்ளது.

 எனினும், ஹவுதி போராளிகள் மீதான தாக்குதலுக்கு கணடிய ராணுவத்தின் ஆயுதங்கள் எதுவும் பயன்படுத்தவில்லை என தெரிவிக்கப்படுகிறது. ஹவுதி போராளிகளின் பல்வேறு ராணுவ களஞ்சியங்கள் உள்ளிட்ட முக்கிய நிலைகள் மீது அமெரிக்க பிரித்தானிய படையினர் கூட்டாக இணைந்து தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 எவ்வாறெனினும் வர்த்தக கப்பல்கள் மீதான தாக்குதல்களை நிறுத்திக் கொள்ளப் போவதில்லை என ஹவுதி போராளிகள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.