பிரான்ஸில் அரசு தற்கொலையை துாண்டுகிறதா ?

#France #government #European union #France Tamil News
Mugunthan Mugunthan
7 months ago
பிரான்ஸில் அரசு தற்கொலையை துாண்டுகிறதா ?

ஐரோப்பாவில் தற்கொலை செய்துகொள்ள எண்ணும் நபர்கள் அதிகம் உள்ள நாடுகளில் பிரான்சும் அண்மைக்காலமாக இணைந்துள்ளது என (Santé publique France) பிரான்ஸ் பொது சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

 18 முதல் 85 வயதிற்குட்பட்ட பிரெஞ்சு மக்களில் 4.2% சதவீதமானோர் இந்த ஆண்டில் தற்கொலை செய்து கொள்வது பற்றி யோசித்துள்ளனர், மேலும் 6.8% சதவீதமானோர் தங்கள் வாழ்நாளில் தற்கொலை முயற்சியை தங்கள் சகாக்களோடு பகிர்ந்துள்ளனர், மற்றும் கடந்த பன்னிரெண்டு மாதங்களில் 0.5% பேர் தற்கொலை முயற்சியை மேற்கொண்டு தோற்றுப்போயுள்ளனர்.

 என (Santé publique France) பிரான்ஸ் பொது சுகாதார அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது. 18 முதல் 24 வயது வரையான இளையோரிடம் தற்கொலை எண்ணங்கள், மற்றும் தற்கொலை முயற்சிகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மேற்குறிப்பிட்ட அமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது.

 18 முதல் 85 வயதுடைய 24,514 பேரிடமும், வெளிநாட்டுத் துறைகள் மற்றும் வெளிப் பிராந்தியங்களில் (DROM) வசிக்கும் 6,519 பேரையும் ஆய்வு குறித்து அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. தற்கொலை முயற்சிகளால் அதிகம் பாதிக்கப்பட்ட மக்களைக் கண்டறிந்து, முடிந்தவரை அவற்றைத் தடுக்கவும், அதன் பின்னர் ஏற்பட்ட வளர்ச்சிகளைப் புரிந்துகொள்ள வைக்கும் இந்த நோக்கமாகவே இந்த கருத்து கணிப்பு செய்யப்பட்டுள்ளது எனவும் (Santé publique France) பிரான்ஸ் பொது சுகாதார அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.