கனடாவில் பல்கலைக்கழக வகுப்புக் கட்டணங்கள் அதிகரிக்கப்படுகிறது

#Canada #University #Canada Tamil News #Class
கனடாவில் பல்கலைக்கழக வகுப்புக் கட்டணங்கள் அதிகரிக்கப்படுகிறது

கனடாவின் கியூபெக் மாகாணத்தில் வகுப்பு கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வகுப்பு கட்டண அதிகரிப்பு மாணவர்களை பாதிக்கும் என ஏற்கனவே அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.

 கியூபெக் மாகாணம் தவிர்ந்த வெளி மாகாணங்களை சேர்ந்த மாணவர்களிடமிருந்து கூடுதல் வகுப்பு கட்டணம் அளவீடு செய்யப்பட உள்ளது. எதிர்வரும் காலங்களில் கியூபெக் மாகாண அரசாங்கம் இவ்வாறு கூடுதல் வகுப்பு கட்டணத்தை அளவீடு செய்ய உள்ளது.

 சுமார் 30% வகுப்பு கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கியூபெக் பல்கலைக்கழகம் ஒன்றில் கற்கும் வெளி மாகாண மாணவர் ஒருவர் செலுத்த வேண்டிய கட்டணம் இவ்வாறு உயர்த்தப்படவுள்ளது. பொதுவாக 9 ஆயிரம் டாலர்கள் செலுத்த வேண்டிய மாணவர் ஒருவர் 12000 டாலர்கள் வரையில் செலுத்த நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது.

images/content-image/1707142016.jpg

 வகுப்பு கட்டண அதிகரிப்பு தொடர்பில் மீள் பரிசீலனை செய்யுமாறு கியூ கியூபெக் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. கட்டண மாற்றம் தொடர்பில் ஆராய்வதற்காக நீக்கப்பட்ட குழு இந்த அறிவுறுத்தலை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 எனினும் இந்த பரிந்துரைகளை புறந்தள்ளி மாகாண அரசாங்கம் வகுப்பு கட்டணங்களை உயர்த்துவது மாணவர்களுக்கு பெரும் நெருக்கடி நிலையை உருவாக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!