ஈபிள் கோபுரத்தின் சுற்றியுள்ள பகுதிகளில் மகிழுந்துகளுக்கு தடை விதிக்க பிரான்ஸ் அறிப்பு

#France #Ban #France Tamil News #Tower
ஈபிள் கோபுரத்தின் சுற்றியுள்ள பகுதிகளில் மகிழுந்துகளுக்கு தடை விதிக்க பிரான்ஸ் அறிப்பு

SUV என அழைக்கப்படும் வாகனங்களுக்கான தர்ப்பிடக்கட்டணம் மூன்று மடங்காக உயர்த்துவதற்கு பொதுமக்கள் ஆதரவு வாக்குகள் அளித்திருந்தனர்.

இந்நிலையில், ஈஃபிள் கோபுரத்தினை சுற்றியுள்ள சில பகுதிகளை 'மகிழுந்துகள் அற்ற' பகுதியாக மாற்றுவது தொடர்பில் பரிஸ் நகரபிதா ஆன் இதால்கோ அறிவித்துள்ளார்.

 ஈஃபிள் கோபுரம் மற்றும் Trocadéro பகுதி, அதை இணைக்கும் pont d'Iéna மேம்பாலம் முழுவதும் மகிழுந்துகள் அற்ற பகுதியாக மாற்றப்படும் எனவும், ஒலிம்பிக் போட்டிகளின் போது நடைமுறைப்படுத்தப்பட உள்ள போக்குவரத்து விதிகள் சில பகுதிகளில் தொடர்ந்து நிலைத்திருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

images/content-image/1707225196.jpg

 மேற்படி பகுதிகளில் மகிழுந்துகள் பயணிக்க நிரந்தர தடை கொண்டுவரப்படும் எனவும், பாதசாரிகள், துவிச்சக்கரவண்டிகளுக்கு அனுமதி மட்டும் இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

 அத்தோடு Champ de Mars பகுதி முழுவதும் சுற்றுலாப்பயணிகளுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு நிறைந்த பகுதியாக மாற்றப்படும் எனவும், வீதியோக வியாபாரிகள் கண்காணிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!