பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சிக்கு கூட்டணிக் கட்சி வழங்கும் ஆதரவு வாபஸ் பெறப்படுமன எச்சரிக்கை

#PrimeMinister #Canada #Warning #Politician #Canada Tamil News
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சிக்கு கூட்டணிக் கட்சி வழங்கும் ஆதரவு வாபஸ் பெறப்படுமன எச்சரிக்கை

பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கத்துக்கு வழங்கி வரும் ஆதரவினை வாபஸ் பெற்றுக் கொள்ளப் போவதாக என்.டி.பி கட்சி தெரிவித்துள்ளது.

 கட்சியின் தலைவர் ஜக்மீட் சிங் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போதியளவு பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக் கொள்ளாத, லிபரல் அரசாங்கத்திற்கு என்.டி.பி கட்சி ஆதரவினை வழங்கி வருகின்றது. குறிப்பிட்ட சில நிபந்தனைகளின் அடிப்படையில் இந்த கூட்டணி அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

images/content-image/1707397843.jpg

 எதிர்வரும் மாதத்திற்குள் மருந்து சீட்டுகளுக்கு அரசாங்கம் வழங்கும் சலுகைத் திட்டம் குறித்த சட்டம் அமுல்படுத்த வேண்டுமென கோரியுள்ளார். கூட்டணி அமைத்துக் கொள்ளும் போது வழங்கப்பட்ட உறுதிமொழிகளை லிபரல் அரசாங்கம் தவறினால் தேர்தல் வரையில் காத்திருக்காது, ஆதரவு வாபஸ் பெற்றுக்கொள்ளப்படும் என ஜக்மீட் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 கூட்டணியிலிருந்து விலகினால் அதற்கான பொறுப்பினை அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!