மருத்துவ சந்திப்பிற்கான கொடுப்பனவை 30 யூரோக்களாக்க பிரான்ஸ் பிரதமர் நடவடிக்கை

புதிய பிரதமராக Gabriel Attal பதவியேற்ற பின்னர் (l'assurance-maladie) அரச மருத்துவ காப்புறுதி நிறுவனத்துக்கு, மருத்துவர்களின் தொழிலாளர் சங்கங்களுக்கு இடையில் நேற்றைய தினம் நடைபெற்ற சந்திப்பின் முடிவில் இதுவரை இருந்து வரும், நோயாளிகள் மருத்துவரை சந்திக்க செலுத்தும் கட்டணமான 26.50€ யூரோக்களில் இருந்து 30€ யூரோக்கள் வரையான கட்டண உயர்வு சாத்தியமாகிறது.
மருத்துவர்களின் கட்டண உயர்வை ஏற்றுக் கொண்ட (l'assurance-maladie) அரச மருத்துவ காப்புறுதி நிறுவனம் மருத்துவர்களிடம் பல வேண்டு கோள்களையும் முன்வைத்துள்ளது.
நோயளரின் ஒரு சந்திப்பிலேயே பல பரிசோதனைகளை செய்வது,(அடிக்கடி மருத்துவரை சந்திக்காமல் இருப்பதற்கு) கட்டாய அவசியம் இன்றி (d'arrêt de travail) மருத்துவ விடுப்ப்புக்கு சான்றிதழ் வழங்குவதை தவிர்ப்பது, தனியார் மருத்துவர்கள் நோயாளர்களை சந்திக்கும் நேரத்தை முன் இரவு வரை நீடிப்பது, மிகுந்த அர்ப்பணிப்போடு செயல்படுவது என பல நிபந்தனைகள (l'assurance-maladie) அரச மருத்துவ காப்புறுதி நிறுவனம் மருத்துவர்களிடம் முன்வைத்துள்ளது.



