கனடாவில் பெற்றோலின் விலை கடந்த ஆண்டை விட அதிகரித்து வருகின்றது

#Canada #prices #petrol #Canada Tamil News
Mugunthan Mugunthan
3 months ago
கனடாவில் பெற்றோலின் விலை கடந்த ஆண்டை விட அதிகரித்து வருகின்றது

கனடாவின் இந்தப் பகுதியில் தொடர்ச்சியாக பெற்றோரின் விலை அதிகரித்துச் செல்லும் போக்கு பதிவாகியுள்ளது. நேற்றைய தினம் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 136.9 சதம் என பதிவாகி இருந்தது. 

இந்த விலையேற்றம் தொடர்ந்தும் அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருவதனால், எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

images/content-image/1707484650.jpg

 குறிப்பாக இந்தியானாவின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமொன்று மூடப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோலின் விலை அதிகரிக்கும் போக்கினை வெளிக்காட்டுகின்றது. கல்கரியின் Tsuu’tina Costco பகுதியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 124.7 சதங்கள் என்ற அடிப்படையில் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 ஏனைய அனேக இடங்களில் பெற்றோரின் விலை அதிகரிப்பு பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டுகளை விடவும் இந்த ஆண்டில் கல்கரியில் பெட்ரோலின் விலை தொடர் அதிகரிப்பினை பதிவு செய்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.