கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் செவ்வாய்க்கிழமை முதல் அரச பணியிலிருந்து ஓய்வு

#SriLanka #Kilinochchi #District #Secretary
Mugunthan Mugunthan
9 months ago
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் செவ்வாய்க்கிழமை முதல் அரச பணியிலிருந்து ஓய்வு

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் அரச சேவையிலிருந்து எதிர்வரும் 13ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஓய்வு பெறவுள்ளார்.

 கிளிநொச்சி 1984 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தனிமாவட்டமாக பிரகடனப்படுத்தப்படட பின்னர் அந்த மாவட்டத்திலிருந்து அரச நிர்வாக சேவைக்கு தெரிவான முதலாவது நிர்வாக சேவை அதிகாரி இவரென்பது விசேட அம்சமாகும்.

 இலங்கை அரச நிர்வாக சேவையில் இவர் தொடர்ச்சியாக 32 வருடங்கள் கடமையை நிறைவேற்றியதுடன், கிளிநொச்சி மாவட்டத்தின் முதலாவது பெண் அரச அதிபராகவும் வரலாற்றில் இடம் பெற்றுள்ளார்.

images/content-image/1707488942.jpg

 வாழ்க்கையில் முன்னோக்கிப் பயணிக்கத் துடிக்கும் பெண்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகவும் துணிச்சல் மிக்க பெண்ணாகவும், பல்வேறு நெருக்கடிகளைக் கடந்து துணிச்சலுடன் பயணித்து மணிவிழா காணும் ரூபவதி கேதீஸ்வரனின் பணிகளையும் சேவைகளையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.

 இவரது சேவையை பாராட்டிக் கௌரவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மணிவிழா நிகழ்வு கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் எதிர்வரும் 13ம் திகதி செவ்வாய்கிழமை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!