கனடாவில் நாளுக்கு நாள் கார்கள் திருடப்படுதல் அதிகரித்து வருகிறது

#Canada #Day #Theft #Canada Tamil News
கனடாவில் நாளுக்கு நாள் கார்கள் திருடப்படுதல் அதிகரித்து வருகிறது

கனடாவின் ஒட்டோவாவில் இந்த ஆண்டில் இதுவரையில் 721 வாகனங்கள் களவாடப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் இதுவரையில் இவ்வாறு வாகனங்கள் களவாடப்பட்டுள்ளன.

 இதன்படி நாளொன்றுக்கு ஆறு வாகனங்கள் என்ற அடிப்படையில் களவாடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த ஏழு நாட்களில் சுமார் 45 வாகனங்கள் களவாடப்பட்டுள்ளன. கனடாவில் வாகன திருட்டை ஒழிக்கும் நோக்கில் மத்திய அரசாங்கம் மாநாடு ஒன்றை நடத்தி வரும் நிலையில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

images/content-image/1707554324.jpg

 ஆண்டுதோறும் கனடாவில் சுமார் 90 ஆயிரம் வாகனங்கள் குறிப்பாக கார்கள் களவாடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு வாகனங்கள் திருடப்படுவதனால் சுமார் ஒரு பில்லியன் டாலர் வரையில் நட்டம் ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 களவாடப்படும் வாகனங்கள் ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு கப்பல் வழியாக கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. கனடாவில் இடம் பெற்று வரும் வாகன திருட்டு தொடர்பில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என்பன கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!