உலகில் கிழமைகள் தோன்றிய சுவாரஸ்யமான கதை. எல்லோரும் இந்த தொடரை வாசியுங்கள்.

#Article #Lifestyle #Spirituality
Mugunthan Mugunthan
9 months ago
உலகில் கிழமைகள் தோன்றிய சுவாரஸ்யமான கதை. எல்லோரும் இந்த தொடரை வாசியுங்கள்.

நாம் தற்காலத்தில் உபயோகிக்கும் கிழமைகள் எவ்வாாறு வந்தது என்றதைப்பற்றி ஒரு சுவாரஸ்யமான கதையே இன்று நாம் இந்த கட்டுரையில் காணவிருக்கின்றோம்.

தற்போது திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என கிழமைகள் நம் வழக்கத்திலுள்ளது. இந்நாட்களில் பொதுவாக நாம் ஆற்றும் காரியங்கள் நாளுக்கு நாள் வளர்ந்து ஒவ்வொரு கிழமையும் நாம் உண்ணும் உணவைக் கூட வேறு பிரித்து வைத்துள்ளோம்.

மனிதனின் வரலாறு ஆரம்பமான காலத்தில் கிழமைகளுக்குப் பெயர் கிடையாது. அப்போதெல்லாம் காலத்தை மாதமாகவே பிரித்திருந்தனர். 

மாதங்கள் வாரங்களாக கணக்கிடப் பட்டதும், வாரத்திற்கு நாட்களும் கிழமைகளும் பிரிக்கப்பட்ட கதையை பார்க்கலாம்… 

images/content-image/1707722359.jpg

ஆரம்ப காலத்தில் பகல் – இரவு, சந்திரன் வளர்ச்சியைக் கொண்டு மாதத்தைக் கணக்கிட்டனர். ஆனால் கிழமைகள் உருவாக்கப்படவில்லை.

 ஒவ்வொரு மாதத் திலும் ஏராளமான நாட்கள் உள்ளன. அத்தனை நாட்களுக்கும் தனித் தனியாகப் பெயர் வைப்பதற்கு சாத்தியப்படவில்லை. மனிதர்கள் சமுதாயமாக கூடி வாழப் பழகிய பிறகு நகரங்களும், வாணிபமும் வளர்ந்தது. வாணிபம் செய்வதற்கு அதாவது சந்தை கூடிப் பொருட்களை வாங்கவும், விற்பனை செய்யவும் வசதியாக அவர்களுக்கு தனியாக ஒருநாள் தேவைப்பட்டது.

 அதற்காக அவர்கள் 10 நாட்களுக்கு ஒருநாள் சந்தை நாளாக ஆரம்பத்தில் ஒதுக்கினார்கள். பின்னர் ஏழு நாட்களுக்கு ஒருநாள் ஒதுக்கப்பட்டது. பண்டைக்காலத்து பாபிலோனியர்களே இதற்கு முன்னோடியாக இருந்தனர்.

 அவர்கள் ஒவ்வொரு ஏழாவது நாளையும் வணிகத்திற்கும், மத விசயங்களுக்கும் மட்டும் ஒதுக்கினர். அந்த நாட்களில் அவர்கள் இந்த இரண்டு அலுவல்களைத் தவிர வேறு எதையும் செய்வதில்லை. யூதர்கள், பாபிலோனியர்களைப் பின்பற்றினர். ஒவ்வொரு ஏழாவது நாளையும் மத விசயங்களுக்கு மட்டுமே அவர்கள் ஒதுக்கினர். இவ்வாறு இரு வாணிப நாட்களுக்கு இடைப்பட்ட காலம் (7 நாட்கள்) வாரம் என்று கணக்கில் கொள்ளப்பட்டது.

 வாரம் பிறந்த வழக்கிலேயே கிழமைகளும் தோன்றின. வாரம் கணக்கிடப் பழகியவர்கள் சந்தைக்கு அடுத்த நாளை ஒன்றாம் நாள், இரண்டாம் நாள் என்று எண்ணிட்டு வழக்கப்படுத்தினர். அடுத்த 7-வது நாள் மீண்டும் சந்தை வந்தது. வாரத்திற்கு 7 நாட்கள் என்ற முறையை கடைபிடித்த எகிப்தியர்கள், வாரத்தின் நாட்களுக்கு பெயர் சூட்டி அழைக்க ஆரம்பித்தனர்.

 அவர்கள் 5 கிரகங்களின் பெயர்களை கிழமைகளுக்கு சூட்டினர். மற்ற இரண்டு நாட்களும் சூரியனின் (ஞாயிறு) பெயராலும், சந்திரனின் (திங்கள்) பெயராலும் வழங்கப்பட்டது. ரோமானியர்கள், எகிப்தியர் வைத்த பெயர்களைப் பின்பற்றினர். மார்ஸ் அல்லது டியூரோமானியர்களின் யுத்த தெய்வம்.

images/content-image/1707722393.jpg

 அந்தப் பெயர் (டியூஸ்டே) செவ்வாய் கிழமையாயிற்று. மற்றோர் தெய்வத்தின் பெயர் வெனஸ், அது (வெனஸ்டே) புதன் கிழமையாயிற்று. இடியை உருவாக்கும் தெய்வமாக ரோமானி யர்கள் வழிபட்டது ‘தர்’ தெய்வமாகும். அதன் பெயரே (தர்ஸ்டே) வியாழக்கிழமை. பரிக் என்பது ரோமானியர்களின் மற்றோர் தெய்வத்தின் மனைவி.

 அந்தப் பெயர் பிரைடே வெள்ளிக்கிழமை ஆயிற்று. சனிக் கிரகத்தின் பெயர் சனிக்கிழமை ஆயிற்று. சூரியன் உதயமான நேரத்திற்கும், மறையும் நேரத்திற்கும் இடைப்பட்ட காலம் பகலாகக் கணக்கிடப்பட்டது. ஒரு நள்ளிரவிலிருந்து அடுத்த நள்ளிரவு வரையுள்ள காலத்தை ரோமானியர் ஒருநாளாகக் கொண்டனர். அந்த முறையைத்தான் இன்றைய நாடுகள் பின்பற்றி வருகின்றன. அதேயே நாமும் பின்பற்றுகின்றோம்.

விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் முன்னேற இவை அனைவரிடத்திலிம் வழக்கமாகும் ஓர் உலக பண்பாகவும் வந்துவிட்டது. இனி நாம் நாளை முதல் ஒவ்வொரு கிழமையும் புரிய வேண்டிய தொழில்களை நமது சமய வழக்கப்படி பார்க்கலாம். அதுவரை தவறாது எமது இந்த லங்கா4 தளத்தினை மறவாது விரல் நுனியில் வைத்திருங்கள். நன்றி.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!