பலஸ்தீனம் தொடர்பில் கூட்டணிக் கட்சியின் யோசனைக்கு கனடா வெளியுறவு அமைச்சு மௌனம்

#Canada #Foriegn #Palestine #Canada Tamil News #Ministry
பலஸ்தீனம் தொடர்பில் கூட்டணிக் கட்சியின் யோசனைக்கு கனடா வெளியுறவு அமைச்சு மௌனம்

கனடிய அரசாங்கம் பலஸ்தீன தேசத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 ஆளும் லிபரல் கட்சியின் கூட்டணி கட்சியான என்.டி.பி கட்சி இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது. பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதன் மூலம் மத்திய கிழக்கு சமாதான முனைப்புக்களை மேற்கொள்ள முடியும் என என்.டி.பி கட்சியின் வெளிவிவகாரத்துறை பொறுப்பாளர் ஹீத்தர் மெக்பிர்சன் தெரிவித்துள்ளார்.

 பலஸ்தீன தேசத்தை சுதந்திர நாடாக அங்கீகரிப்பது குறித்த பிரேரணை ஒன்றை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஹமாஸ் – இஸ்ரேல் படையினருக்கு இடையிலான போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர் இஸ்ரேலிய தேசத்தை அங்கீகரிப்பது குறித்து கவனம் செலுத்தி வருவதாக பிரித்தானியா மற்றும் அமெரிக்கா என்பன தெரிவித்துள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 பலஸ்தீன தேசம் தொடர்பிலான என்.டி.பி கட்சியின் யோசனைக்கு கனடிய வெளிவிவகார அமைச்சர் மெலெனி ஜோலியோ எதிர்க்கட்சிகளோ இதுவரையில் தங்களது நிலைப்பாட்டை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!