இஸ்ரேலின் தாக்குதல்களைக் கண்டித்துள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதி

#France #Attack #Israel #President #France Tamil News #condemn
இஸ்ரேலின் தாக்குதல்களைக் கண்டித்துள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதி

இஸ்ரேல் காஸா பகுதியில் தொடர் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக காஸாவின் தெற்கு பகுதியான Rafah பகுதியில் இரவு பகலாக குண்டு மழை பொழிந்து வருகிறது.

 இந்நிலையில், இந்த தொடர் தாக்குதலை பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கண்டித்துள்ளார். ‘மிகப்பெரும் மனிதப்படுகொலை’ என கண்டித்த ஜனாதிபதி, ‘ஹமாஸ் போராளிகள் அங்கு இருந்தாலும்.

 அத்தகைய நடவடிக்கையை தொடர்வது மனிதாபிமானமற்ற பேரழிவுக்கு வழிவகுக்கிறது’ என ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்துள்ளார். பல்வேறு உலகநாடுகள் கண்டனம் தெரிவித்தும் இஸ்ரேலிய ஜனாதிபதி பெஞ்சமின் நெதன்யாகு தனது தாக்குதலில் முனைப்புடன் இருக்கிறார்.

 குறிப்பாக தற்போது தாக்குதல் இடம்பெற்று வரும் Rafah பகுதியில் முன்னர் 200,000 பேர் வசித்த நிலையில், தற்போது அங்கு 1.4 மில்லியன் மக்கள் தஞ்சம் புகுந்துள்ளனர். அவர்கள் மீதே இடைவிடாத தாக்குதலினை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!